அம்மாவை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தளபதி…வெளியான பரபரப்பு வீடியோ!..
நடிகர் விஜயின் கட்சி கொடி அறிமுக விழா இன்று நடந்த முடிந்துள்ளது. விழா முடிந்திருக்கும் நிலையில் தாய் சோபாவிடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா இருவரின் ஒரே மகனாக சினிமா துறைக்குள் கால் பதித்தவர் நடிகர் விஜய். முதலில் பெரிய தடுமாற்றங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக தன் மகனுக்கு படங்களை இயக்கி வந்தார் சந்திரசேகர். பின்னர் அவருக்காக பல இடங்களில் சென்று வாய்ப்புகளையும் தேடி தந்தவர்.
இதையும் படிங்க: இத விட ஒரு கிஃப்ட் எதுவும் இல்ல! தாய் ஷோபாவிடம் இருந்து விஜய்க்கு பறந்த செய்தி
மெதுவாக தொடங்கிய தளபதியின் பயணம் இன்று கோலிவுட்டின் உச்சம் நட்சத்திரமாக அமர வைத்துள்ளது. தமிழில் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் விஜய் தன்னுடைய நடிப்பை விட்டு அரசியல் பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த பயணத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆனாலும் இருவருக்கும் துப்பாக்கி படத்தில் இருந்து மனகசப்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து தாய் மற்றும் தந்தையை விஜய் தொடர்ந்து சந்தித்து வந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில் விஜயின் கட்சிக்கொடி மற்றும் பாடல் அறிமுக விழா இன்று சென்னையில் அவருடைய தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. அதற்கு தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா இருவரும் நேரில் சென்று கலந்து கொண்டனர். இதில் அவர்களுக்கு இரண்டாவது இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியது.
இதையும் படிங்க: முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?
சில நிமிடங்களில் விழா முடிந்து சோபா விஜய் அழைக்கும் போது பார்க்காமல் அவர் திரும்பிக் கொண்டு சென்றதாக வீடியோ காட்டபட்டது. ஆனால் சில நொடிகளில் அந்த வீடியோ மாற்றப்பட்டு இன்னொரு கோணத்திற்கு கேமரா திருப்பட்டதையும் ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட்களாக எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ விழாவிலேயே இப்படி ஒரு பிரச்சினையுடன் தொடங்கி இருக்கும் நிலையில், விஜய் தன்னுடைய குடும்பத்தை மதிப்பதே இல்லை எனவும் ரசிகர்களிடம் விமர்சனங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
SHAME ON YOU VIJAY😡
👉 மேடையில் விஜய் : “கொடி அறிமுக விழாவிற்கு, அம்மா அப்பா வந்தது சந்தோசம். நன்றி.”
👉 மேடையில் இருந்து இறங்கியபின், அம்மா கூப்பிடும்போது மதிக்காமல் சென்ற #க்கட்சி விஜய் 🤦♂️😢😡
#TVKபரிதாபங்கள் #TVKFlag pic.twitter.com/8WDfwocmYO
— Kingsley (@CineKingsley) August 22, 2024