மொத்த படத்துக்கே ஆறுதானா? தளபதியையே வச்சு செய்த படக்குழு… இதான் விஷயம்…

by Akhilan |   ( Updated:2024-08-19 09:38:59  )
மொத்த படத்துக்கே ஆறுதானா? தளபதியையே வச்சு செய்த படக்குழு… இதான் விஷயம்…
X

Vijay: சன்னமான குரலில் பேசும் வில்லன் கேங் ஆள்தான் விஜய்யின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான திருமலை படத்தின் இயக்குநர். இன்னும் சொல்லப்போனால், விஜய்யை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம் திருமலைதான்.

அந்த அளவுக்கு திருமலை படம் விஜய்யின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்தது. துணை இயக்குநராக இருந்த நண்பர் ராதாமோகனை சந்திக்கச் சென்றபோது விஜய்யின் அறிமுகம் கிடைத்து அவரிடம் ரமணா சொன்ன கதைதான் திருமலை. இந்தப் படத்தில் விஜய் வைத்திருந்த கெட்டப், கிட்டத்தட்ட 2015 புலி படம் வரையிலும் தொடர்ந்தது.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

ஆரம்பத்தில் இந்த கெட்டப்புக்கு மாற விஜய் தயங்கிய நிலையில், டெஸ்ட் ஷூட் படங்களைப் பார்த்து ரொம்பவே பிடித்துப்போனதாம். அதன்பிறகே, திருமலை கெட்டப் உருவாகியிருக்கிறது. குஷி படத்துக்குப் பின் விஜய்யுடன் ஜோதிகா இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பார். வித்யாசாகர் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

'பாட்டுகள் அத்தனையும் அதிரடி! தீபாவளிக்கு இவனே சரவெடி!!’ என்றே படத்தின் புரமோஷன் விளம்பரங்களில் வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன. படத்தில் மெக்கானிக்காக விஜய் இருப்பார். இதற்காக சென்னை வடபழனி மோகன் ஸ்டூடியோவில் கலை இயக்குநர் கதிர் புதுப்பேட்டை ஏரியாவை அப்படியே தத்ரூபமாக செட் போட்டிருப்பார்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

2003-வாக்கிலேயே 50 லட்ச ரூபாய் செலவில் 40 நாட்களில் அந்த செட் போடப்பட்டதாம். படத்தை கவிதாலயா புரடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தயாரித்திருந்தார். திருமலை படம் முழுக்கவே நடிகர் விஜய்க்கு ஆறே ஆறு காஸ்ட்யூம்கள் மட்டும்தான் பயன்படுத்தினார்களாம்.

ஒரு மெக்கானிக்கிடம் அவ்ளோதான் டிரஸ் இருக்கும் என டைரக்டர் ரமணா முடிவெடுத்திருக்கிறார். திம்சு கட்டை, அழகூரில் பூத்தவளே என இரண்டு பாடல்களில் மட்டும் எக்ஸ்ட்ரா காஸ்ட்யூம்கள் பயன்படுத்தினார்களாம்.

Next Story