விஜய் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கலை… அவ்வளோ கூட்டம்…கேரளா சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாருப்பா…

by Akhilan |
விஜய் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கலை… அவ்வளோ கூட்டம்…கேரளா சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாருப்பா…
X

Vijay: தமிழ் சினிமா மலையாள சினிமாவை அவ்வப்போது தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். ஆனால் தமிழ் சினிமாவை எப்போதுமே கேரளா கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறது என்பதை முன்னணி நடிகர் பிரித்விராஜ் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். அவரின் சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கிவிட்ட நிலையில் தன்னுடைய கேரியருக்கு பெரிய ப்ரேக் எடுத்து அரசியலில் இணைய இருக்கிறார். அவரின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் பிரேக்கால் தமிழ் சினிமாவின் மார்கெட் சரியும் எனவும் கிசுகிசுத்தனர். அதை விட பல விநியோகிஸ்தர்கள் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பிரச்னை ஏற்கனவே இருந்தது. இந்த நேரத்தில் விஜயின் அரசியல் எண்ட்ரி அவரின் சினிமா இமேஜை மேலும் அதிகரித்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் விஜயின் லியோ படத்துக்கு 20, 30 நாளுக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை. விஜயின் எல்லா படங்களுமே அங்கு ஹிட் தான். ஆண்டாண்டு காலமாக தமிழ் படங்களை கேரளாவில் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். மலையாள படங்கள் அவ்வப்போது தான் தமிழ்நாட்டில் ஹிட் கொடுக்கிறது எனவும் நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

பிரேமம் படத்தினை தாண்டி மலையாளத்தின் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தினை தான் தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்து இருக்கின்றனர். அதுவும் தமிழின் குணா படத்தின் குகையை மையமாக கொண்டு உருவானதில் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story