2 நாளைக்கு முன்பு வெளிவந்த விஜயின் ஜனநாயகன் படத்தின் டிரைலர் வீடியோ 3.67 கோடி வியூஸை பெற்றுள்ளநிலையில், ஒரு நாளைக்கு முன்பு வெளிவந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரெய்லர் டியோ 4.19 கோடி வியூஸ்களை பெற்றிருப்பதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
இது Fake புரமோஷன். Bot Traffic.. பணம் கொடுத்து இப்படி வியூஸ்களை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு செகண்டுக்கு 5 ஆயிரம் வியூஸ்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு மில்லியன் வியூஸ் என பராசக்தி டிரெய்லருக்கு கிடைத்து வருகிறது. இது சாதாரணமாக ரசிகர்கள் பார்த்தால் இவ்வளவு வியூஸ் வராது. எனவே ஜனநாயகனை விட பராசக்தி டிரெய்லர் அதிக வியூசை பெற்றிருப்பதாக காட்டுவதற்காக போலியாக இப்படி ஒரு பணம் கொடுத்து அதிகப்படுத்தியிருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் பராசக்தி படக்குழுவை திட்டி வருகிறார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இந்த தகவலை எடுத்து போட்டு ஜனநாயகன் டிரெய்லரை விட பராசக்திக்கு டிரெய்லருக்கு அதிக வியூஸ் என்று பதிவிட்டு சந்தோஷப்பட்டு வருகிறார்கள். வேண்டுமென்றே ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தியை இறக்கினார்கள். தற்போது டிரெய்லர் வீடியோவிலும் இதுபோல மோசடி செய்கிறார்கள் என பலரும் குற்றம் சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை டிரெய்லர் மற்றும் டீசர் வீடியோ வியூசில் விஜய்தான் எப்போதும் டாப். அவரின் மாஸ்டர் டிரெய்லர் வீடியோ 8 கோடி, லியோ 7.1 கோடி, பீஸ்ட் 6.5 கோடி, பிகில் 6 கோடி, கோட் 5.8 கோடி, வாரிசு 5.4 கோடி, இதில் அஜித்தின் துணிவு மட்டுமே 6.7 கோடி வியூஸ்களை பெற்றது. எனவே அவரால் மட்டுமே விஜயின் ரெக்கார்டை தொட முடிந்தது. வேறு யாருமில்லை’ என பதிவிட்டிருக்கிறார்.
