இந்த கண்டனங்களுக்கு பின்னால் விஜய்தான் இருக்கிறார்… இருந்தும் இதுமட்டும் போதுமா? பிரபல விமர்சகர் காட்டம்..!
Vijay Trisha: மன்சூர் அலிகான் சொன்ன தேவையில்லாத கருத்துக்களால் தற்போது நிறைய கண்டனங்களை தான் வாங்கி வருகிறார். இந்த விஷயத்தில் பலர் கண்டனங்கள் சொன்னால் கூட விஜய் அமைதி காப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஷ்மீரில் எனக்கு த்ரிஷாவை காட்டவே இல்லை. ஒரு கற்பழிப்பு சீன் கூட இல்லை. மற்ற நடிகைகள் பண்ணது போல த்ரிஷாவை பண்ணலாம் என இருந்தேன். 150 படங்களில் நான் பண்ணாத விஷயமா என மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் அடுக்கி கொண்டே போனார்.
இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. லுக்குல கிக்கு ஏத்தி சொக்க வைக்கும் மாளவிகா மோகனன்..
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தன்னை இப்படி மன்சூர் அலிகான் பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது. அவர் சமூகத்துக்கே கேடு. இப்படிப்பட்டவருடன் இனி நடிக்கவே மாட்டேன் என திரிஷா ட்வீட் போட்டு இருந்தார். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து பேசிய திரை விமர்சகரும், பத்திரிக்கையாளருமான பிஸ்மி பேசியபோது: திரிஷா விஷயத்தில் மன்சூர் அலிகான் பேசியது கண்டனத்துக்கு உரியது தான். ஆனால் லோகேஷ், செவன் ஸ்க்ரீன் ட்வீட் எல்லாம் விஜயை சந்தோஷப்படுத்துவது போல தான் இருக்கு. அவருக்காக இவர்கள் கண்டன ட்வீட் போட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இவர்கள் கற்புக்கரசி கண்ணகியா?!.. மன்சூர் அலிகானுக்கு ஆதரவா களமிறங்கும் பயில்வான்…
விஜய் படத்தில் நடித்த த்ரிஷாவை வைத்து தான் மன்சூர் அலிகான் இப்படி ஒரு விஷயத்தினை பேசி இருக்கிறார். நீங்க தான் நடிகர் முதல் ஆளாக உங்க கண்டனத்தினை பதிவு செய்து இருக்க வேண்டும். அமைதியாக இருக்கும் நீங்கள் தான் நாளை அரசியலுக்கு வரப் போகிறீர்களா?
அப்போ சமூகத்தில் வேறு பெண்களுக்கு நடந்தால் இப்படி தான் அமைதி காப்பீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். தொடர்ந்து மன்சூர் அலிகான் விவகாரம் பரபரப்புக்குள் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் மன்சூருக்கு ரெட் கார்ட் கொடுத்தாலும் அச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.