அஜித் வசனத்துக்கு கவுண்ட்டர் கொடுக்கப்போகும் விஜய்?!.. இதனால்தான் வாரிசு டிரெய்லர் தாமதமா?!...

by சிவா |
ajith
X

ajith

திரையுலகில் பொதுவாக எப்போதும் இரண்டு நடிகர்களிடையே தொழிற்போட்டி இருந்து கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர்- சிவாஜி காலத்தில் துவங்கி ரஜினி - கமல், விஜய் - அஜித் என அது தொடர்ந்துகொண்டே வருகிறது. அதிலும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளது இரு நடிகர்களின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அஜித் விஜய் படங்கள் ஒன்றாக வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

vijay

vijay

வசூலை பொறுத்தவரை அஜித்தை விட ஒரு படி மேல் விஜய் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் அவரின் படங்கள் நல்ல வசூலை பெறுகிறது. அப்படி இருந்தும், வாரிசோடு மோதுவது என அஜித் முடிவெடுப்பார் என விஜயே எதிர்ப்பார்க்கவில்லையாம். அஜித்தின் நம்பிக்கைக்கு காரணம் இருக்கிறது. ஹெச்.வினோத் துணிவு திரைப்படத்தை பக்கா ஆக்‌ஷன் படமாக எடுத்துள்ளார்.

வெறும் வங்கிகொள்ளை என்பதோடு மட்டுமில்லாமல் வேறு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் வினோத் இப்படத்தில் வைத்துள்ளாராம். அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியான காட்சிகள் நிறைய இப்படத்தில் இருக்கிறதாம். அதனால்தான் துணிந்து இறங்கியிருக்கிறார் அஜித். சுருக்கமாக அஜித்துக்கு இப்படம் இன்னொரு மங்காத்தாவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இப்படத்தில் நடித்த நடிகர்கள் கொடுக்கும் பேட்டிகளில் இதைத்தான் கூறி வருகிறார்கள்.

ajith

ajith

இது வாரிசு படக்குழுவினருக்கு ஜெர்க்கை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம், துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு அவர்களை கொஞ்சம் ஆட்டம் காண செய்திருக்கிறது. எனவே, வாரிசு படத்தின் டிரெய்லர் சிறப்பாக அமைய வேண்டும் என படக்குழு இன்னும் வேலைசெய்து வருகிறது. அதனால்தான் கடந்த 4 நாட்களாக இன்று வரும் இன்று வரும் என எதிர்பார்த்து இன்னும் வராமல் இருக்கிறது வாரிசு டிரெய்லர். இப்போதும் கூட டிரெய்லர் எப்போது என வாரிசு படக்குழு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

varisu

வாரிசு படத்தில் சில சண்டை காட்சிகள் இருந்தாலும் இப்படம் ஒரு செண்டிமெண்ட் படம்தான் எனக்கூறப்படுகிறது. எனவே, துணிவு டிரெய்லருக்கு மேல் வரவேற்பு இருக்கும்படி வாரிசு டிரெய்லர் இருக்க வேண்டும் என நினைத்த படக்குழு அதற்கேற்ப டிரெய்லரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

துணிவு பட டிரெய்லரில் அஜித் ‘என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கை வைக்கலாமா’ என்கிற வசனம் பேசுகிறார். இதை இயல்பாக அமைந்த வசனமா, இல்லை யாரையோ மனதில் வைத்து அஜித் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேசுவது போல காட்சிகளை டிரெய்லரில் சேர்க்கும் வேலையும் நடப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: படத்திற்காக கட்டிய தாலி!.. நடிகர் மீதுள்ள அன்பால் கழட்ட மறுத்த நடிகை!..

Next Story