ஜேசன் படத்துல கவின் நடிக்க தளபதிதான் காரணமாமே!... என்ன நடந்துச்சு தெரியுமா?...

by amutha raja |
vijay and jeson
X

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் ஆவார். இவர் தனது குழந்தை பருவம் முதலே தனது அம்மாவழி தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். இவரின் பள்ளி கல்லூரி காலங்கள் அனைத்துமே லண்டனில்தான்.

விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் இவர் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடியிருப்பார். மேலும் இவர் லண்டனில் பட இயக்குனருக்கான படிப்பினை முறைப்படி கற்றுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரஹ்மானால் பறிபோன படவாய்ப்பு.. காலை வாரிய துருவ் விக்ரம்.. ஹிட்டு கொடுத்தும் புலம்பும் இயக்குனர்…

இவர் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைக்கவிருக்கிறார். இவரின் அறிமுகப்படமான இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது.

இதனை தொடர்ந்து இவரின் முதல் படத்தில் எந்த நடிகர் நடிக்கலாம் என பலவித கருத்துகளும் உலாவி கொண்டிருந்தன. அதர்வா, கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் என பல நடிகர்களின் பெயர்கள் நெட்டிசன்களிடையே உலாவி கொண்டிருந்தன. ஆனால் தற்போது இவரது படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க:கமல் வச்ச கன்னிவெடி!.. 150 கோடி கொடுத்தும் இப்படியா?!.. பிரபாஸுக்கு நேரமே சரியில்ல…

இதற்கு காரணம் இளைய தளபதிதான் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் அதர்வாவோ அல்லது துருவ் விக்ரமோ நடித்தால் நெப்பாட்டிசத்தின் உச்சக்கட்டம் என பல பேச்சுகளும் நடக்கலாம். மேலும் இது ஜேசனுக்கு முதல் படம் என்பதால் முதல் படத்திலேயே இவ்வித விமர்சனங்களை பெறுவது வருங்காலத்திற்கு பிரச்சினையாக இருக்கலாம் என விஜய் கூறியுள்ளாராம்.

தனது தந்தை சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தும் அவரது அனுபவங்களை கருத்தி கொண்டும் ஜேசன் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இவரது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் இசையமைப்பாரா அல்லது அனிருத் இசையமைப்பாரா என்பது பற்றி இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க:‘அயலான்’ படத்தில் இவங்களும் இருக்காங்களா? 23 வருஷம் கழிச்சு ரீஎண்ட்ரியில் கலக்க வரும் விஜய் பட நடிகை

Next Story