Cinema News
கோட் 1000 கோடி அடிக்காம போனதுக்கு காரணமே விஜய்தான்!.. என்னப்பா சொல்றீங்க!..
Goat: இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி விட்டாலே போதும். இது 500 கோடி வசூலை தாண்டும், ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள். சில யுடியூப் சேனல்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள் அப்படி பேச, ரசிகர்களும் அதையே பிடித்துக்கொள்கிறார்கள்.
பாகுபலி 2 படத்தில் இருந்துதான் இது துவங்கியது. பேன் இண்டியா படமாக வெளியான அப்படம் 800 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. எனவே, எல்லா பெரிய நடிகர்களுக்கும் தங்களின் படம் ஒரு பேன் இண்டியா படமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. எனவே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகள் டப் செய்து வெளியிட்டார்கள்.
இதையும் படிங்க: 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?!.. பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பும் கோட்!…
தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியிட்டார்கள். படத்தை வெற்றிபெற வைக்க ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களை கேமியோ வேடத்தில் நடிக்க வைத்தனர்.
அப்படி உருவான ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்றது. விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது கோட் படம். இந்த படமும் 1000 கோடியை வசூலிக்கும் என சொன்னார்கள். ஆனால், இந்த படத்தில் வேற்று மொழி நடிகர்கள் நடிக்கவில்லை. எனவே, அதற்கு வாய்ப்பில்லை என்றே பலரும் சொன்னார்கள்.
இதையும் படிங்க: ‘கோட்’ காப்பினு சொன்னாங்க.. கொஞ்சம் கூட மாத்தாம அப்படியே எடுத்து வச்சிருக்காரே
கோட் படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே கல்லா கட்டி வருகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் எதிர்பார்த்த வசூல் இல்லை. இது தயாரிப்பாளருக்கே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு படத்தை புரமோட் செய்யவேண்டும் எனில் படத்தின் ஹீரோ பல ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கவேண்டும்.
ஆனால், கோட் படத்திற்கு வெங்கட்பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் மட்டுமே புரமோஷன் செய்தார்கள். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனாமாடியிருந்தார் திரிஷா. கடைசிவரை அது யாருக்கும் தெரியவில்லை. விஜயும், திரிஷாவும் சில நாட்கள் நேரில் வந்து புரமோஷன் செய்திருந்தால் இப்படம் மற்ற மொழிகளிலும் பல கோடிகளை வசூல் செய்திருக்கும் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கோட் படம் தமிழத்தில் 130 கோடியையும், உலக அளவில் 310 கோடியையும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?