நண்பர்தான் போஸ் கொடுப்பாரா? விண்டேஜ் லுக்கில் வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்

Published on: June 8, 2024
ajith
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் விஜய். வசூல் ரீதியிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி இவருடைய படங்கள்தான் என்று நம்பர் ஒன் படமாக இருந்து வருகின்றன. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல திரையரங்கு உரிமையாளர்கள் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணமாக இருப்பது விஜயின் படங்கள் தான்.

விஜயின் ஒவ்வொரு படங்களின் ரிலீஸ் சமயத்திலும் இவருடைய படங்கள் ஒரு பெரிய லாபத்தை ஈட்டி கொடுக்கின்றன. அதனால் பல விநியோகஸ்தர்கள் முண்டியடித்துக் கொண்டு இவருடைய படத்தை வாங்க வரிசையில் காத்திருக்கின்றனர். விஜய் அடுத்ததாக அரசியலில் களமிறங்க போகிறார். அதனால் சினிமாவிற்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார்.

இதையும் படிங்க:பிரேம்ஜி காதலில் நடந்த பிரச்சினை! ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்

இந்த செய்தி வெளியானதில் இருந்து பல திரையரங்கு உரிமையாளர்கள் அதை எதிர்த்து வருகின்றனர். ஒரு வேளை விஜய் சினிமாவில் இருந்து விலகி விட்டால் அது திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு என பல பேர் கூறி வந்திருக்கிறார்கள்ல் தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.

VIJAY
VIJAY

இந்த படத்தில் விஜயின் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பொதுவெளியில் விஜயை பார்க்கும் பொழுதும் கிளீன் ஷேவ் செய்து கொண்டு பார்க்கவே மிகவும் வித்தியாசமாக இருந்தார். ஆனால் இப்பொழுது திடீரென விஜயின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. அதில் விண்டேஜ் விஜய் எப்படி கண்ணில் ஒரு ஸ்டைலான கண்ணாடி போட்டு இருப்பாரோ அதே ஒரு லுக்கில் இப்போது அந்த புகைப்படத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் அஜித்தின் புகைப்படம் ஒவ்வொரு நாளும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்க அதற்கு போட்டி போடும் விதமாக இப்பொழுது விஜய்யின் இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: மோகனை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்டிய பாலசந்தர்… அட அந்தப் படத்துக்கா…. அப்படின்னா தேவை தான்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.