விஜயகாந்திடம் எஸ்.ஏ. சி கேட்ட உதவி.. பதிலுக்கு பிரேமலதா என்ன கேட்டார் தெரியுமா..?

vijii

VIJAY
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் பான் இந்தியா அளவில் உருவாகி வருகிறது. இந்திய அளவில் முன்னணி நடிகராக விளங்கும் இவர். ஆரம்ப காலத்தில் அவருடைய படங்கள் தோல்வி தழுவின. இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு இயக்குனர் ஆவார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்தவர். விஜயை நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் எஸ். ஏ. சி . அப்பொழுது அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பெரும் தோல்வியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியாக சுமார் 60 லட்சம் ரூபாய் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

SAC
உடனே தனது மகனை வெற்றி பட நாயகனாக மாற்ற விரும்பி விஜயகாந்திற்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்றை விடுத்தார் ”விஜி உங்களை பார்க்க வேண்டும் என்றும் ஒரு உதவி வேண்டும்” என்றும் கூறினார்.உதவி என்று சொன்னதும் விஜயகாந்த் எஸ்.ஏ.சியின் வீட்டிற்கு மின்னல் வேகத்தில் விரைந்தார்.விஜயகாந்திடம் நடந்ததை கூறினார். இந்த மாதிரி ”நாளைய தீர்ப்பு படம் சரியாக போகவில்லை, உங்களுடன் இணைந்து விஜயை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் தேதி மட்டும் சொல்லுங்கள் படபிடிப்பிற்கு வருகிறேன் என்றார் .

viji
அப்பொழுது இப்ராஹிம் ராவுத்தர் தான் விஜயகாந்திற்கு மேனேஜராக இருந்தவர். அவரிடம் கூட கேட்காமல் உடனே தேதி கொடுத்தார் விஜயகாந்த்.விஜயகாந்தின் பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது . இதற்கிடையில் சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்த் , இயக்குனர் செல்வமணி மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சி மூவரும் இடம் ஒன்றை அடுத்தடுத்து வாங்கி இருந்தார்கள். அதில் விஜயகாந்த் மற்றும் செல்வமணி ஆகியோர் தங்களுக்கென ஒரு வீட்டை கட்டிக் கொண்டுள்ளனர்.

VIJI
எஸ்.ஏ. சியின் இடம் மட்டும் மீதம் இருந்துள்ளது. ஒரு நாள் எஸ்.ஏ. சி விஜயகாந்தின் வீட்டிற்கு சென்றிருந்தபோது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா எஸ்.ஏ.சியிடம் இருக்கும் அந்த இடத்தை கேட்டார். அப்பொழுது அவர் நான் பிற்காலத்தில் அந்த இடத்தில் ஒரு வீடு கட்டப் போறேன் என்று பதில் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் எஸ்.ஏ. சி விஜயை வெற்றி பட நாயகனாக்க விஜயகாந்த் இடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது. உடனே விஜயகாந்த் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் செந்தூரபாண்டி. எஸ்.ஏ. சி ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் தொகையை கொடுக்க முற்பட்டபோது விஜயகாந்த் அதை வாங்க மறுத்தார். பின்பு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பல லட்ச ரூபாய் லாபமும் கிடைத்தது.

VIJAY
படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மாபெரும் லாபத்தை தருகிறது. ஆனால் விஜயகாந்த் பணத்தை வாங்க மாட்டார் என்று தெரிந்த எஸ்.ஏ.சி அன்று பிரேமலதா கேட்ட அந்த இடத்தை விஜயகாந்த் பெயருக்கு பதிவு செய்து அந்த பத்திரத்தை விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவியிடம் கொடுத்தார். இவ்வாறாக நடந்ததுள்ளது என்று பிரபல வலைப்பேச்சு யூடிப் சேனலில் வெளிவந்துள்ளது.