பொங்கல் ரேஸில் விஜய்க்கு புடிச்சது இந்த படம் தானாம்!.. ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன சூப்பர் மேட்டர்!..

by Saranya M |   ( Updated:2024-01-21 20:43:42  )
பொங்கல் ரேஸில் விஜய்க்கு புடிச்சது இந்த படம் தானாம்!.. ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன சூப்பர் மேட்டர்!..
X

இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழில் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் பைலிங்குவல் படமான மெரி கிறிஸ்துமஸ் என 4 படங்கள் வெளியாகின. இதில், நடிகர் விஜய்யை ரொம்பவே கவர்ந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எல்லாம் சரியான கலெக்‌ஷன் பார்த்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், போட்டியாக வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் தமிழ்நாட்டில் பின்னடைவை சந்தித்துள்ளது என்கின்றனர். ஆனால், மற்ற இடங்களில் கேப்டன் மில்லர் ஓடுகிறது என்றும் அயலான் வாஷ் அவுட் என்றும் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஆளா வேணா இருந்துட்டு போ! ஆனா மனுஷனா இரு.. அஜித்தை பங்கம் பண்ணிய இயக்குனர்

இந்த இரு படங்களில் நடிகர் விஜய்க்கு கேப்டன் மில்லர் படம் தான் ரொம்பவே பிடிச்சிருக்காம். கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆன நிலையில், அந்த படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்புராயன் தான் தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்.

நடிகர் விஜய் கேப்டன் மில்லர் படத்தை பார்த்திருக்க மாட்டார் என நினைத்த ஸ்டன்ட் மாஸ்டருக்கு சர்ப்ரைஸாக படம் தாறுமாறா இருக்கு.. அதிலும் உங்க வொர்க் சூப்பர் என விஜய் பாராட்டினார் என திலீப் சுப்புராயன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித்தை தப்பா பேசாதீங்க!.. விஜயகாந்த் நினைவேந்தலுக்கு வராததற்கு இதுதான் காரணமா?.. பிரபலம் பதில்!

கேப்டன் மில்லர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த்தா நுனி தான் நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கும் கேமராமேன் என்பது கூடுதல் தகவல். இதுல கேமராவை ஷேக் செய்து எடுத்தது போல அங்கேயும் எடுத்து வச்சிடாதீங்க என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story