40 கதை கேட்டு தூங்குனா அவரு எங்க.. 20 வருஷ கதைய மறக்காத விஜய் எங்க… தளபதிடா!
Vijay Story: இயக்குனர் சொல்லும் கதையில் சுவாரஸ்யமே இல்லாமல் பொழுதுபோக்காக கதை கேட்கும் நடிகர்கள் மத்தியில் சரியாக யுகித்து கதை கேட்பவர் விஜய் தான். அவரின் கதை கேட்கும் திறன் ரொம்ப ஸ்பெஷல் என்பதற்கு சமீபத்திய ஒரு விஷயம் ரொம்பவே பொருந்தி வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
திரை விமர்சகர் செய்யாறு பாலு இந்த சம்பவம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான ரவி மரியாவினை சந்திக்க நேர்ந்தது. அவரும் நானும் பல நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பேச்சு விஜயின் பக்கம் சென்றது. விஜய் என்னை பார்த்தார். எப்படிணே இருக்கீங்க அந்த படம் இன்னும் இருக்குல என மறக்காமல் கேட்டார் எனக்கு ரொம்ப சிலித்துவிட்டு என்றார். நான் அவரிடம் அப்படி என்னப்பா கதை அது என்றேன்.
இதையும் படிங்க: அப்பனுக்கு சளைச்சவன் இல்லனு காட்டிட்டாரு! ஜேசன் விஜயின் மாஸ்டர் ப்ளானில் இணைந்த நடிகர்கள்
குஷி படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யாவின் அசோசியேட்டாக வேலை செய்து வந்தேன். ஒருமுறை விஜய் வர தாமதம் ஆனதை அடுத்து அவருக்காக நான் டூப்பாக சில லாங் காட்சியில் நடித்து கொடுத்தேன். அந்த சமயத்தில் விஜயின் ஷூட்டிங் வந்துவிட்டார்.
படப்பிடிப்பெல்லாம் முடிந்துவிட்டு அவரிடம் சென்று பேசினேன். எந்த கோபவமும் இல்லாமல் சகஜமாக பேசினார். அப்போ என்னிடம் கதை இருக்கா எனக் கேட்டார். நானும் இருப்பதாக சொன்னேன். சரி வீட்டுக்கு வந்து கதை சொல்ல சொன்னார்.
அவரின் வீட்டுக்கு சென்றேன். எனக்கு அவர் கையாலே காபி போட்டு கொடுத்தார். கதை கேட்க உக்கார்ந்தார். இண்ட்ரோ முதல் எண்ட் வரை சொல்லி முடித்தேன். எந்த ஹாலிவுட் படத்துல சுட்டீங்க என்றார். ஐயோ சார் என்னோட கதை இது எனக் கூறவும் நம்பவே முடியலை சார் கண்டிப்பா பண்ணலாம் எனக் கூறினார்.
இதையும் படிங்க : இவரே சோலிய முடிச்சுருவார் போலயே! வாண்ட்டடா போய் பாதாளத்தில் விழும் சூரி – ஆட்டுவிப்பது இவராச்சே
அவரின் அப்பாவிடம் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்தது. ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் சூப்பர்குட் நிறுவனத்திடம் கதை சொல்ல சொன்னார். கடைசியில் அங்கு போன போது ஜீவாவை அறிமுகம் செய்ய போறோம். அதுக்கு கதை சொல்ல சொன்னார்கள்.
ஆசைஆசையாய் படம் இயக்கினேன். அப்புறம் என்னுடைய வாழ்க்கை நடிப்பு பக்கம் திரும்பி எங்கையோ போய் விட்டது. விஜய் வேறு உயரத்துக்கு போய்விட்டார். ஆனாலும் என்னை நினைவில் வைத்து அந்த கதையை கேட்டதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.