தளபதி - 67 கதையை காத்துல பறக்கவிட்ட மிஷ்கின்!.. டென்ஷனான விஜய்.. அதிருப்தியில் லோகேஷ்..
தமிழ் சினிமாவின் மாஸ் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒரு முன்னனி ஹீரோவுக்கு இருக்கிற மரியாதையும் அன்பும் ஆரவாரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவராக லோகேஷ் விளங்குகிறார். மேடையில் இவர் தோன்றினாலே அனல் பறிக்கும் விசில்களும் கைத்தட்டல்களும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அந்த அளவுக்கு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் லோகேஷ். இவரின் அடுத்த படைப்பான தளபதி - 67 படத்தின் அப்டேட்கள் பற்றி பல ஹேஷ் டேக்குகள் இணையத்தில் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷின் மீது மீண்டும் பலத்த எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றன.
அதுவும் விஜயுடன் கூட்டணி என்பதால் கூடுதலாகவே எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஏற்கெனவே விக்ரம் படத்தின் வெற்றி இன்னும் இந்த படத்தில் அதிகமாகவே இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க : உங்கள விட அவருதான் முக்கியம்.. எம்ஜிஆரிடமே தில்லா சொன்ன ஏவிஎம் சரவணன்!. யாரா இருக்கும்?..
அவருடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்விராஜ், நிவின்பாலி போன்ற முன்னனி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மிஷ்கின் திடீரென ஒரு அப்டேட்டை இணையத்தில் பரப்பி விட்டார். அதை பார்த்து லோகேஷ் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
சற்று கூடுதலாகவே விஜய் ரொம்பவும் டென்ஷனாகி விட்டாராம். விஜய் மிஷ்கின் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறதாம். அதை முடித்து விட்டு மிஷ்கின் டிவிட்டர் பக்கத்தில் ‘எனக்கும் விஜய்க்கும் உள்ள சண்டைக் காட்சிகளை படமாக்கினார்கள். ஒரே இரத்த கொலவெறியில விஜயின் முகம். என்னமா எடுக்கிறான் லோகேஷ்’ என்று பதிவிட்டிருந்தார்.
ஒரு சின்ன அப்டேட் கிடைச்சாலே ரசிகர்களின் ஆட்டத்தை பார்க்கமுடியாது. இதில் ஒரு குட்டிக் கதை மாதிரி சீனை
பற்றி விளக்கிய மிஷ்கினின் இந்த செயலால் லோகேஷ் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. விஜயும் டோட்டல் அப்செட்டாம்.