உங்களுக்கு சரியான ஆளு இவங்கதான்.. விஜய் பண்ண தவறை சுட்டிக் காட்டிய ஃபேட்மேன் ரவி..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இளைய தளபதி என்ற பட்டம் இருந்தாலும் இருந்திருக்கும். சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையை கிளப்பிவிட்டு இருந்த பட்டத்திற்கும் வேட்டு வைக்கிற மாதிரி சில விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இவரின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான படம் வாரிசு.
இந்த படம் பெரிய எதிர்பார்ப்புடன் வந்திருந்தாலும் துணிவு படத்தோடு மோதியதால் வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி சற்று சரிவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜயே சில சமயங்களில் வாரிசு படத்தை அவ்வப்போது காப்பாற்றக் கூடிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதையும் படிங்க : கமல் நடிச்சா சரி வராது…நீங்க தான் நடிக்கணும்…ரஜினியை வற்புறுத்திய பிரபல தயாரிப்பாளர்…! .அப்புறம் நடந்தது என்ன?
இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான ஃபேட்மேன் ரவீந்திரன் கூறும் போது துணிவு படம் மட்டும் வரவில்லை என்றால் வாரிசு படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும், ,மிகப்பெரிய வெற்றியையும் பதிவு செய்திருக்கும், அதை விட்டுவிட்டு அவர் நிலையில் இருக்கிற ஆகச்சிறந்த நடிகரோடு மோத கதையை கொஞ்சம் வித்தியாசமாக பண்ணியிருந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.
மேலும் படம் பார்க்கும் பொழுது சில ரசிகர்கள் விருமன் படத்தோடு வாரிசு படத்தை ஒப்பிட்டு பார்ப்பதை பார்க்க முடிந்தது. விருமன் படத்திலயும் பிரகாஷ்ராஜ் அப்பா,அவருக்கும் மூன்று மகன்கள், மூன்றாவது மகன் தான் குடும்பத்தை நிலை நிறுத்துவான். ரசிகர்கள் கிண்டலடிப்பதை கண்கூடாக பார்க்கும் போது நானும் அதே ரசிகன் நிலையில் இருந்தால் அதே மாதிரி தான் யோசிக்க முடியும் என்று கூறினார்.
மேலும் விஜய்க்கு ஒரே ஒரு வேண்டுகோள், தமிழ் டைரக்டர்ஸுக்கு வாய்ப்பை கொடுங்கள், அவர்களுக்கு தான் தெரியும் உங்களை எப்படி காட்டமுடியும், எந்த மாதிரியான கதையில் உங்களை சேர்க்கமுடியும் என்று. புதுபுது ஐடியாக்களை கொண்டு வரவேண்டும் என்பதெல்லாம் ஓகே. ஆனால் உங்களை இயக்கத் தெரிந்தவர்கள் தமிழ் டைரக்டர்ஸ்கள் மட்டுமே என்று வாரிசு பட அனுபவத்தை பகிர்ந்தார் ரவீந்திரன். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தேவையானதை விஜயே அவருக்குள் புகுத்தியிருக்கிறார் என்பதும் தெரிகிறது என்று கூறியிருந்தார்.