Connect with us
siva

Cinema News

விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

Vijay Sivakarthikeyan: விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ,மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர் .

படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் அதன் வி.எப்.எக்ஸ் வேலைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலி சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட க்ளைமேக்ஸ் பற்றிய ரகசியம்! இவ்ளோ வலிகளுக்கு நடுவே எடுத்த காட்சியா அது?

அதை ஏஜிஎஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் கோட் மற்றும் விஜயின் அடுத்த திரைப்படம் இதன் பிறகு விஜய் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். அதனால் சமூக வலைதளங்களில் அடுத்த விஜய் யார் என்பது பற்றி ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு வருகின்றது. அதில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதற்கு ஏற்ப இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில்  நடிப்பதும் ஒரு வேளை அடுத்த விஜய் இடத்தை பிடிப்பதற்காக போடப்படும் திட்டமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து தான் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: சினிமா கத்துக்க மனுசன் என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!.. போராடி வெற்றி பெற்ற அயோத்தி பட இயக்குனர்…

அந்த மரியாதை நிமித்தம் காரணமாக கூட சிவகார்த்திகேயனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறி வருகிறது. ஆனால் இதற்கு பின்னணியில் விஜயின் ஒரு மாஸ்டர் பிளானும் அரங்கேறி இருக்கிறது. என்னதான் பெரிய ஹீரோக்கள் படமாக இருந்தாலும் தனக்கு இணையான புகழை உடைய ஒரு ஹீரோவை தன் படத்தில் நடிக்க வைக்க எந்த ஹீரோவும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் விஜய் இதில் சிவகார்த்திகேயனை அனுமதித்திருக்கிறார் என்றால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்  மனதிலும் எப்படியாவது தான் இடம்பெற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் கூட சிவகார்த்திகேயனை இதில் அனுமதித்திருப்பார். இது வருங்கால அரசியலுக்கும் உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கில் தான் விஜய் இதை செய்திருப்பார் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கூலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் இதுதான்!.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…

google news
Continue Reading

More in Cinema News

To Top