விஜய் இப்படி பண்ணது எதுக்காக தெரியுமா? ஆடியோ லாஞ்ச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷோபா சந்திரசேகர்…
தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விஜய் திகழ்ந்து வந்தாலும், அவரின் வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சியின் பங்கு மிகப்பெரியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனினும் சமீப காலமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பல செய்திகள் வெளிவருகின்றன. சில நாட்களுக்கு முன் ஒரு திரைப்பட விழாவில் இது குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “எல்லார் வீட்டிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனைகள் உண்டு. அது போல்தான் எனக்கு விஜய்க்கும் இருக்கிறது” என பகீரங்கமாகவே ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து விஜய் தனது பெற்றோரின் திருமண நாளுக்கோ அல்லது அவர்களின் பிறந்தநாளுக்கோ கூட அவர்களை சந்திக்க செல்வதில்லை என பேச்சுக்கள் அடிபட்டன. இதனை தொடர்ந்து “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது பெற்றோரிடம் விஜய் சிரித்துக்கூட பேசவில்லை என்று பல சர்ச்சைகள் கிளம்பின.
“வாரிசு” திரைப்படத்தில் குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பல வசனங்கள் பேசும் விஜய், தனது சொந்த வாழ்க்கையில் அதனை மருத்துக்கூட கடைப்பிடிக்கவில்லை என்று பல விமர்சனங்கள் இணையத்தில் எழுந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகர், அந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்பேட்டியில் இது குறித்து ஷோபா சந்திரசேகர் பேசியபோது “நாங்கள் இருவரும் ஒரு விருந்தினராகத்தான் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டோம். அந்த விழாவில் ரசிகர்களை திருப்திப்படுத்துவது மட்டும்தான் விஜய்யின் நோக்கம்.
அங்கே நம்மை விஜய் கவனிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை, அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. அது ரசிகர்களுக்கான விழா. எங்களுக்கு அதில் சந்தோஷம் என்னவென்றால், விஜய்க்கு இவ்வளவு பெரிய விழா நடக்கிறது என்பதுதான்.
ரசிகர்களை திருப்திப் படுத்துகிற விழாவில் நாங்கள் அதனை எதிர்பார்க்கக்கூடாது. பல பத்திரிக்கைகளில் இது குறித்து சர்ச்சையாக எழுதுகிறார்கள். ஆனால் விஜய்யும் நாங்களும் தினமும் சந்தித்து பேசிக்கொண்டுத்தானே இருக்கிறோம் பின்பு ஏன் ரசிகர்களுக்கான விழாவில் எங்களை தனியாக கவனிக்கவேண்டும்? நாங்கள் அது போல் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை” என அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.