லோகேஷ் கனகராஜ் செய்த காரியத்தால் அசந்துபோன தயாரிப்பாளர்... இப்படி எல்லாமா ஒருத்தர் இருப்பாரு!
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகாந், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “மாநகரம்” என்பதை பலரும் அறிவார்கள். இத்திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து “கைதி” திரைப்படம் மாபெறும் வெற்றிபெற்றது.
அதன் பின் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளரை அசரவைத்த லோகேஷ்
அதாவது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஃபோட்டோஷூட் நடத்தவேண்டும் என விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் வலியுறுத்த, அதற்கு அடுத்த நாள் ஃபோட்டோஷூட் நடைபெற்றது. எப்போதும் ஃபோட்டோஷூட்டுக்கே பல கோடி ரூபாய் செலவு செய்வார்களாம். மும்பையில் இருந்து பிரபல புகைப்படக் கலைஞர்களை இறக்குவார்களாம்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் அது போன்று செய்து தயாரிப்பாளரின் காசை வீணடிக்கவில்லையாம். அந்த படத்தின் ஸ்டில் புகைப்படக்காரரைத்தான் பயன்படுத்திக்கொண்டாராம். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், “எவ்வளவு பணம் வேண்டுமோ தயங்காமல் கூறுங்கள்” என கூறியிருக்கிறார். அதற்கு லோகேஷ் கனகராஜ், “படத்துக்கு என்ன தேவையோ அதுவே போதும்” என கூறினாராம். இந்த பதிலை கேட்டு தயாரிப்பாளர் அசந்துவிட்டாராம்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் இப்படி ஒரு உறவு இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!