அடேய் இவ்வளோ ஒரிஜினலாவா பண்றது… திடீரென வைரலாகும் தளபதி69 பட போஸ்டர்…

by Akhilan |
அடேய் இவ்வளோ ஒரிஜினலாவா பண்றது… திடீரென வைரலாகும் தளபதி69 பட போஸ்டர்…
X

Thalapathy69: விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 69 திரைப்படத்தின் தொடர் பேச்சுக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் படக்குழுவின் வேலையை மிஞ்சும் அளவு ரசிகர்கள் செய்திருக்கும் ஒரு வேலை ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். தளபதி 69 திரைப்படத்தோடு நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு முழுவதுமாக அரசியலில் ஈடுபடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:பாடலில் தெறிக்கவிட்ட வாலி!.. கவிஞருக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை!..

அந்த வகையில் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 யார் இயக்குவார் என்ற கேள்விதான் கோலிவுட் வட்டாரத்தில் பல நாட்களாக நீடித்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி வெற்றிமாறன், அட்லி, திரிவிக்ரம் உள்ளிட்ட ஏகப்பட்ட இயக்குனர்கள் பட்டியலில் இருந்தனர்.

ஆனால் தற்போது விஜய் ஹெச்.வினோத்தை தன்னுடைய இயக்குனராக தீர்மானித்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கோலிவுட் வட்டாரத்திலிருந்து தொடர்ச்சியாக கசிந்து வருகிறது. பொதுவாகவே அரசியல் படம் எடுப்பதில் கில்லியான வினோத் விஜயின் கடைசி படத்தை இயக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

ஏற்கனவே அரசியல் கட்சிக்குள் நுழைய இருக்கும் விஜய் தன்னுடைய கடைசி படத்தை அரசியல் படமாக தான் உருவாக்க எண்ணுவார் என்ற தகவல்கள் ஏற்கனவே கசிந்துவிட்டது. இதனால் வினோத்- விஜய் கூட்டணியில் இப்படம் உருவாவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றும் எக்ஸ் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரைஸ் டு ரூல் என்ற ஹேர் ஹேஸ்டேக்குடன் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர் போன்று வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் உருவாக்கியது எனக் கூறப்படுகிறது.

இதுவரை தளபதி69ஐ தயாரிக்க இருக்கும் டிவிவி என்டர்டைன்மென்ட் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெயம் ரவிக்கு முன்பே சிம்புவோடு பிரச்சினை செய்த மாஸ் நடிகர்! அடிதடியில என்ன நடந்தது தெரியுமா

Next Story