பிடிக்காமல்தான் விஜயின் அந்த படத்தை இயக்கினேன்.! ஆனால் படம் தாறுமாறு ஹிட்.!

by Manikandan |   ( Updated:2022-03-26 11:03:21  )
பிடிக்காமல்தான் விஜயின் அந்த படத்தை இயக்கினேன்.! ஆனால் படம் தாறுமாறு ஹிட்.!
X

ஒரு காலத்தில் அடுக்குமொழி வசனத்துக்கும், பரபரக்கும் ஆக்சன் காட்சிகளுக்கும் மிகவும் பேர் போனவர் இயக்குனர் பேரரசு. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ஆக்சன், செண்டிமெண்ட், அடுக்கு மொழி வசனம் எல்லாமே கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

அவர் முதன் முதலாக விஜய் நடித்த திருப்பாச்சி படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் தொடங்கப்பட்ட அனுபவங்களை அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் பேரரசு பேசியிருந்தார்.

இவர் இயக்குனர் ராம நாராயணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த்து பின்னர், இயக்குனராக வாய்ப்பு தேடினார். அப்போது, யதார்த்தமான கதைக்களங்களை எழுதி தயாரிப்பாளர்களை அணுகினாராம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது, ஒரு மாஸ் கமர்சியல் திரைப்படம் தானாம்.

இதையும் படியுங்களேன் - பெண்கள் குறித்து அவதூறு கருத்து.! கைது செய்யப்படுவாரா பயில்வான்.?!

அதற்கு பிறகு கோபத்தில் தான் திருப்பாச்சி கதையை எழுதி முடித்துள்ளாராம் இயக்குனர் பேரரசு. அதனை சூப்பர் குட் பிலிம்ஸிடம் கொண்டு சென்றுள்ளார். அவர்களுக்கு கதை பிடித்துப்போகவே, உடனடியாக விஜயிடம் கதை கூற அனுப்பியுள்ளார்.

அங்கு கதையை கேட்ட விஜய்க்கு கதை பிடித்துப்போகவே உடனே செய்துவிடலாம் என கூற, அப்படித்தான் பேரரசுவின் முதல் படம் விஜய் நடிக்க, திருப்பாச்சி என வெளியாகி பொங்கல் தினத்தை தீபாவளியாக மாற்றியது. படம் மிக பெரிய வெற்றி. அதனை தொடர்ந்து உடனடியாக விஜய் - பேரரசு இணைந்து சிவகாசி படமும் எடுத்து அதுவும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

Next Story