விஜய் படத்துக்கு ட்ரோல்... தொடர்ந்து வந்த விபரீதம்... நடந்தது இதுதான்!
90ஸ் குட்டீஸ்களில் எந்த நிகழ்ச்சியைத் தவற விட்டாலும் லொள்ளு சபாவை மட்டும் யாரும் மிஸ் பண்ணியிருக்க மாட்டாங்க. கமல், ரஜினி, விஜய், அஜீத், விஜயகாந்த், சரத்குமாருன்னு எந்த ஹீரோக்களின் படங்கள் என்றாலும் வச்சி செஞ்சிட்டாங்கப்பான்னு சொல்ற மாதிரி ட்ரோல் பண்ணி இருப்பாங்க.
அதைப் பார்க்கும் போது நாம் விழுந்து விழுந்து சிரிப்போம். சிசர் மனோகர், சந்தானம் கூட்டணியில் வரும் லொள்ளு சபாவைப் பார்க்கும் போது சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும்.
அந்த வகையில் தற்போது லொள்ளு சபாவில் சந்தானத்தைத் தொடர்ந்து கலக்கிய ஜீவா தனது மறக்க முடியாத அனுபவங்களை நினைவு கூர்கிறார். வாங்க பார்ப்போம்.
போக்கிரி படம் ரிலீஸானதுமே லொள்ளு சபால போட்டுட்டோம். அது டிரெண்டிங்காக ஆகணும்னு எல்லாம் இல்ல. அந்த டைம்ல டைரக்டர் போய் படத்தைப் பார்த்தாரு. இதை வேணும்னே பண்ணல. அவங்களை ட்ரால் பண்ணனும்னு நினைக்கல.
இதையும் படிங்க... விஜய் கட்சி பாடலை விவேக் எழுதக் காரணம் .. இத்தனை விஷயங்கள் இருக்கா?
இன்னொன்னு அந்தப் படம் வந்தபோது நான் படமே பார்க்கல. ஜெனரலா தளபதியோட மத்த படங்களைப் பார்த்து பாடி லாங்குவேஜ் பண்ணினேன். அந்தப் படமே அதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்.
அப்போ விஜய் டிவில ஆயிரம் ஜன்னல் வீடுன்னு ஒரு தொடர் நடந்துக்கிட்டு இருந்தது. நான் நைட் 1 மணி வரைக்கு சூட்டிங் முடிச்சிட்டு காரைக்குடி போயிட்டேன். 10 நாள் கழிச்சித்தான் நான் ஊருல இருந்து திரும்பியே வர்ரேன்.
இந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் ஊருலயே இல்லை. அப்புறம் தான் தெரிஞ்சது. எல்லாரையும் தேடிக்கிட்டு இருக்காங்க. நான் மட்டும் ஊருல இருக்கேன். என்னய்யா இவ்ளோ பிரச்சனையா இருக்கு. அதுக்கு அப்புறம் தான் படமே பார்த்தேன்.
அப்போ டீமைத் தேடித் தேடிப் போய் பாம் வச்சாங்க. நான் ஊருல இல்ல. ரொம்ப தூரம்ன உடனே திரும்பிப் போயிட்டங்க. மனோகரன் அம்மா அதை பாம்னு தெரியாம அந்தப் பார்சலை வாங்கி பீரோவுல வச்சாங்களாம். இப்போ அதை நினைச்சா காமெடி. உண்மையிலயே அது நடந்துருந்தா டிராஜடி.
சந்தானம் வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி எல்லாரையும் அரவணைச்சிக் கூட்டிட்டுப் போனான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.