அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்னர் எல்லாரையும் கவர் செய்யும் விஜய்… எங்க நிக்கிறாரு பாருங்க!

Published on: April 8, 2024
---Advertisement---

Vijay: வாரிசு நடிகராக சினிமாவிற்குள் வந்த விஜய் தேறும் வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கிசுகிசுத்தனர். ஆனால் அதையெல்லாம் உடைத்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார். அதற்கு முன்னால் அவரின் சூப்பர் பிளான்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்த எஸ் ஏ  சந்திரசேகரின் மகனாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் விஜய். முதல் சில படங்கள் அவருக்கு நெகடிவ் விமர்சனங்களை அதிகம் வந்தது. ஒரு கட்டத்தில் அவரின் முகத்தோற்றத்தைக் கூட பெரிய அளவில் விமர்சித்தனர்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி

ஆனால் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய வெற்றி சமீப காலமாக அசுரத்தனமாக உயர்ந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு இணையாக லியோ படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தது.

இருந்தும் கூட கோலிவுக்கே ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்குவது விஜய் தான். தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா காரியரை தளபதி திரைப்படத்தோட முடித்துக் கொண்டு அரசியல் களத்தில் இணைகிறார் 

அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. முன்பு போல் இல்லாமல் ஷூட்டிங்கிற்கு வரும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாகி கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பொதுவாகவே விஜய்யை ஜோசப் விஜய் எனவே அரசியல் வட்டாரத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: என்னது மகள் முறையா? சர்ச்சைக்குள்ளான வேல ராமமூர்த்தியின் திருமணம்.. பின்னனியில் நடந்த சம்பவம் இதோ

 முதலில் தன்னை ஒரு மதத்திற்கு அடையாளப்படுத்துவதை விரும்பாத விஜய் அந்த கோட்பாட்டை உடைக்கும் முடிவோடு களம் இறங்கி இருக்கிறார். அதன்படி சமீபத்தில் அவர் சாய்பாபா கோயிலில் வழிபாடு செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் எல்லா விதத்திலும் தன்னுடைய அரசியல் பயணத்தை சரியாக தொடங்கி இருக்கிறார் என கமெண்ட்களை தட்டி வருகின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.