ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?

by Akhilan |
ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?
X

Thalapathy69: விஜய் நடிப்பில் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. இதையடுத்து தளபதி69 படத்தின் இயக்குனர் குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

லியோ படத்தின் வெளியீட்டை தொடர்ந்து விஜய் தன்னுடைய 68வது பட வேளைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இப்படம் டைம் டிராவல் படமாக உருவாக இருப்பதால் விஜயின் கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க:இயக்குனர் பண்ண ஒரே தப்பு! விக்ரம் கெரியரே போச்சு – சொன்னத கேட்டிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?

இதை தொடர்ந்து விஜய் அரசியலுக்குள் போவார். அதனால் இரண்டு அல்லது மூன்று வருடம் நடிப்பில் கேப் விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு படம் முடித்த பின்னரே அவர் ப்ரேக் எடுக்கலாம். இல்லை நடிப்புடன் சேர்த்தே அரசியல் வேளையிலும் ஈடுபடுவார்.

அதுகுறித்த முடிவு இன்னமும் விஜய் தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு படத்தினை முடித்து விட்டு விஜய் தன்னுடைய அடுத்த படத்தினை பக்கா கமர்சியல் படமாக உருவாக வேண்டும் என்ற ஐடியாவில் இருக்கிறாராம்.

அதனால் தன்னுடைய அடுத்த இயக்குனராக கார்த்திக் சுப்புராஜை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் சொன்ன கதையை விஜய் ஓகே சொல்லி விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: கஷ்டப்படும்போது இப்படித்தான் இருந்தேன்!… படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்..

Next Story