அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு.!? கே.ஜி.எப் இயக்குனர் பக்கம் வண்டிய திருப்பிய விஜய் ரசிகர்கள்.!

by Manikandan |   ( Updated:2022-04-07 10:44:58  )
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு.!? கே.ஜி.எப் இயக்குனர் பக்கம் வண்டிய திருப்பிய விஜய் ரசிகர்கள்.!
X

தமிழ் சினிமாவில் தற்போது அதிக செய்திகளில் சிக்குபவர் என்றால் அது தளபதி விஜய் தான். அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகிறது அதனால் அவரை பற்றிய செய்தி வெளிவந்தாலும், அதனையும் தாண்டி அவரது அன்றாட நடவடிக்கைகள் பேசு பொருளாக மாறும்.

vijay

அதிலும் அண்மையில் அதிகம் பேசப்பட்ட விஜய் செய்தி என்றால் அது, விஜய் - பிரபல அரசியல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் என்பது தான். அவரை விஜய் சென்று சந்தித்தார் என்று ஒரு குரூப்பும், பிரசாந்த் கிஷோர் தான் விஜயை பனையூரில் சந்தித்தார் என்றும் பல தகவல்கள் வெளியாகின.

இது சில அரசியல் கட்சியினருக்கு எதோ மனஸ்தாபம் என கூறப்படுகிறது. மேலும் , பீஸ்ட் படத்தில் விஜய் காவி துணியை கிழித்து தனது முகத்தை காண்பிப்பார். அதுவே, பேசுபொருளானது, மேலும், அதனை பற்றி இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன.

இதையும் படியுங்களேன் - உங்களுக்கு வேற தலைப்பே கிடைக்கலையா.? டைட்டிலுக்கே பஞ்சாயத்து ஏற்பட்ட திரைப்படங்கள் லிஸ்ட்..

இதனை கண்ட விஜய் தரப்பினர் சிலர், விஜய் , பிரசாந்த் கிஷோரை சந்திக்கவில்லை, கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீலை தான் சந்தித்தார். விரைவில் கே.ஜி.எப் இயக்குனர் இயக்த்தில் விஜய் படம் நடிக்க உள்ளார் என கிளப்பி விட்டுவிட்டனர்.

இதனை கேள்விப்பட்ட, பிரசாந்த் நீல் தரப்பு அதனை முற்றிலும் மறுத்துவிட்டது. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தான் முழு கவனத்துடன் இயக்கி வருகிறார். அதனை தவிர்த்து இன்னோர் படத்தை பற்றி அவர் யோசிக்கவில்லை என கூறிவிட்டனர்.

Next Story