நல்லவேளை விஜய் நடிக்கல!..பொன்னியின் செல்வன் தப்பிச்சிடுச்சி!..இப்படி சொல்லிட்டாரே பிரபலம்!...
இயக்குனர் மணிரத்னம் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை மிகவும் பிரம்மாண்டமாக பல நட்சத்திரங்கள் ஒன்று கூட மாபெரும் காவியமாக தயாரித்து சில தினங்களுக்கு முன் தான் நம் கண்ணுக்கு விருந்தாக்கினார். படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இன்று வரை திரையரங்கிற்கு அலைமோதுகின்றனர்.
வசூலிலும் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எடுக்க ஆசைப்பட்ட இந்த பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதையும் படிங்கள் : ஏழு வருஷமா இந்த கொடுமையை அனுபவிச்சேன்!..கிளாமர் நடிகை ஓப்பன் டாக்!..
மணிரத்னம் இதை நினைக்கும் போதே அவர் மனதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கதாபாத்திரங்களாக வந்து வந்து போயிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு போன்றோர் இந்த படத்திற்காக போட்டோ சூட் வரை வந்து அதன் பிறகு விலகி இருக்கின்றனர்.
இதையும் படிங்கள் : மன்னர் பரம்பரை நடிகை எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தது எப்படி? யார் அந்த நடிகை?
இதை குறிப்பிடும் வகையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு புகழ் பிஸ்மி நல்ல வேளை இந்த படத்தில் விஜய் நடிக்கல, நடித்திருந்தால் அது பொன்னியின் செல்வன் படமாக இருந்திருக்காது. விஜய் படமாக தான் இருந்திருக்கும். மேலும் அவர் நடித்து வெளியிருந்தால் அஜித் ரசிகர்கள் மண்ணை அள்ளி போட்டிருப்பார்கள், இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என பிஸ்மி கூறினார்.