அஜித்திற்கு மேடையிலேயே வாழ்த்து கூறிய விஜய்.! நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணியில் எஸ்.ஏ.சி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்களின் அஜித் - விஜய் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரது திரைப்படத்தில் யார் திரைப்படம் வந்தாலும் அந்த நாள் தியேட்டர்களில் திருவிழாவாக கொண்டாடப்படும் அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கொண்டவர்கள் விஜயும் அஜித்தும்.
இப்படி இருக்க கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஆர்.டி.நேசன் இயக்கிய ஜில்லா திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது.
இதில் இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பதிவு செய்தது. இதில் ஜில்லா வெற்றி படத்தை கொண்டாடுவதற்காக விநியோகஸ்தர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
இதையும் படியுங்களேன் - நாங்கெல்லாம் அப்போவே ஆஸ்கர் லெவல் நாயகன்டா... இந்திய சினிமாவை மிரள வைத்த ஆண்டவர் சம்பவங்கள்...
அந்த விழாவில் பேசுகையில் விஜய், ' படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் , தனது நன்றியை கூறிவிட்டு, ரசிகர்களுக்கு வழக்கம் போல நன்றியை கூறிவிட்டு, இறுதியாக நண்பர் அஜித்தின் திரைப்படமான வீரம் திரைப்படமும் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அஜித்திற்கும் நடிகை தமன்னாவிற்கும், படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என மேடையிலேயே நெகிழ்ச்சியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தளபதி விஜய்.
தன்னுடைய சக சினிமா போட்டியாளர் அஜித் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் தளபதி விஜய் செய்த காரியம் என்று அவருடைய மதிப்பை கூட்டியது என்றே கூறலாம்.