தனுஷின் அசுர வளர்ச்சி… அன்றே கணித்த தளபதி… ஜோசியம் மாதிரி பட்டுன்னு சொல்லிட்டாரே…

Published on: October 20, 2022
Vijay and Dhanush
---Advertisement---

தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், தனது ஆரம்பக்கட்டத்தில் தனது உடலமைப்பு காரணமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் அந்த தடைகளை எல்லாம் உடைத்து தற்போது தமிழில் மட்டுமல்லாது, இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்தளவுக்கு அவரின் வளர்ச்சி ஆச்சரியத்தக்க வளர்ச்சியாக பலரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது.

Dhanush
Dhanush

இந்த நிலையில் தனுஷின் இந்த அபாரமான வளர்ச்சி குறித்து நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பேட்டியில் கூறினாராம். அதாவது ஒரு பிரபல பத்திரிக்கையை சேர்ந்த நிருபர் ஒருவர் விஜய்யிடம் “ரஜினி, கமல் ஆகியோருக்கு பிறகு விஜய், அஜித் என பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் இப்போது தனுஷ், சிம்பு ஆகியோரை குறித்துதான் பேசுகிறார்கள். உங்களுடைய பிடி தளர்ந்துவிட்டதா?” என கேட்டாராம்.

Dhanush and Vijay
Dhanush and Vijay

அதற்கு “எனக்கென ஒரு இடம் இருக்கிறது. அந்த பிடியை விட்டால்தானே அந்த இடத்தை வேறு யாராவது எடுத்துக்கொள்ள முடியும். புதிதாக வந்த சிம்பு, தனுஷ் ஆகியோரை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இவர்கள் மிகவும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். குறிப்பாக தனுஷ் ஒரு புதிய அலையை உண்டு செய்திருக்கிறார். நிச்சயமாக தனுஷிற்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது” என விஜய் கூறினாராம். இத்தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.