நான் எவ்ளோ பெரிய ஆளு?.. என்னைப் போய் இப்படியா?.. இயக்குனரிடம் கொந்தளித்த விஜய்..

Published on: February 22, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் இப்போது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் வெளியான வாரிசு படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. விஜய் – லோகேஷ் கூட்டணி ஏற்கெனவே மாஸ் சம்பவம் பண்ணிய நிலையில் லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது.

vijay1
vijay1

பக்கா செண்டிமெண்ட் படத்தில் நடித்து வந்த விஜய் இப்போது முழு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து கமெர்சியல் ஆக்‌ஷன் ஹிட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த பெரிய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களில் அவரின் தந்தைக்கும் முக்கிய பங்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாது ஒன்று.

ஆரம்பத்தில் விஜயை வைத்து சந்திரசேகர் பல நல்ல படங்களை கொடுத்தார். மேலும் அவரை எப்படியாவது சினிமாவில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக பல பேரின் உதவிகளை நாடியிருக்கிறார் சந்திரசேகர். இந்த நிலையில் சந்திரசேகரின் உதவியாளரும் இயக்குனருமான பொன்ராம் விஜயை பற்றி சில தகவல்களை கூறினார்.

vijay2
vijay2

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டி.எஸ்.பி போன்ற படங்களை இயக்கியவர் தான் பொன்ராம். ஒரு சமயம் சுக்ரன் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார். ‘சுக்ரன்’ திரைப்படம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படம்.

இந்த படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அப்போது கதை விவாதத்தில் பொன்ராம் மற்றும் மற்ற உதவியாளர்கள் இருந்த சமயத்தில் விஜய் அங்கு வந்தாராம். அவர்களிடம் ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டாராம். இவர்களும் கதையை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

vijay3
ponram

அதனை அடுத்து விஜய் ‘ நான் எப்பேற்பட்ட ஆளு. என்னைப் போய் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து விட்டீர்களே’ என்று கூறினாராம். அதற்கு பொன்ராம் ‘சார் கதைக்கு தேவைப்பட்டாதால தான் இப்படி’ என்று சொல்ல அதற்கு விஜய் ‘சரி வெயிட்டான ரோல் தானே’ என்று கேட்டு ஒரே களேபரம் பண்ணிட்டாராம். இதை பொன்ராம் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : கல்லடி பட்ட பாம்பு சும்மா இருக்குமா?.. படமெடுத்த விக்னேஷ்சிவன்.. ஏகே 62க்கு எதிராக தரமான கூட்டணி..