நெப்போலியனை தொடர்ந்து அருண்பாண்டியன் கிட்டயும் வம்பு பண்ண விஜய்! அவரே சொல்றார் பாருங்க

Published on: April 24, 2024
arun
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறார். அதனால் தேர்தலுக்குள் அவர் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் தனது முழு கவனத்தை செலுத்த இருக்கிறார்.

இதையும் படிங்க: டாப் 10 நடிகர்களின் முதல் 100 கோடி வசூல்!. என்னென்ன படங்கள்?.. வாங்க பார்ப்போம்!..

சினிமாவில் நடிகர்களாக இருந்த பல பேர் அரசியலுக்குள் வந்து தங்களுடைய சேவைகளை செய்திருக்கின்றனர். உதாரணமாக எம்ஜிஆர், விஜயகாந்த், கமல் உட்பட பல நடிகர்கள் அரசியலுக்குள் வந்து கால் பதித்திருக்கின்றனர், அதில் ஒரு சில பேர் மட்டுமே அரசியலிலும் சாதனை படைத்திருக்கிறார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருந்தவர் எம்ஜிஆர்.

அடுத்ததாக விஜயகாந்த் ஸ்டைலில் கெத்தாக களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார் விஜய். இவருடைய அரசியல் வருகையை குறித்து பல பிரபலங்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகர் அருண்பாண்டியனும் அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் இல்லைனா நீங்க இல்ல! அருண்விஜயை டென்ஷனாக்கிய நிருபர்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா?

ஒரு நடிகர் பீக்கில் இருக்கும்போது அரசியலுக்குள் வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு ரிட்டையர்ட் வயதில் இருக்கும்போதோ அல்லது மார்க்கெட் முழுவதும் சரிந்த நிலையிலோ அரசியலுக்கு வருவார்கள். ஆனால் விஜய்யை பொறுத்தவரைக்கும் அவருடைய மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதை நான் மிகவும் வரவேற்கிறேன். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கும் அவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அவருடன் நிறைய தடவை சண்டை போட்டிருக்கிறேன். இருந்தாலும் அவருடைய இந்த அரசியல் வருகையை நான் சந்தோஷமாக வரவேற்கிறேன் என அருண்பாண்டியன் கூறி இருக்கிறார்.

என்னது கெட்டப் பைத்தியமா?.. கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுப்பாரா தங்கலான்?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.