ஒரு நாள் நடித்துவிட்டு வேண்டாம் என உதறிய விஜய்.! வாய்ப்பை பயன்படுத்தி சூப்பர் ஹிட்டடித்த சூர்யா.!
சினிமாவில் பல நேரங்களில் பல திருப்பங்கள் நடைபெறும். அது நீங்கள் பார்க்கும் திரில்லர் திரைப்படங்களையே மிஞ்சும் அளவிற்கு கூட நடைபெறும். அப்படி பல சம்பவங்கள் திரை மறைவில் நடந்துள்ளன.
ஒரு நடிகர் நடிப்பதாக அறிவித்து விட்டு, அந்த நடிகரை வைத்து ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு கூட படத்தில் இருந்து தூக்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்படி, பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒரு ஹீரோ கதை கேட்டு பிடிக்கவில்லை என கூறி மற்ற ஹீரோ நடித்து ஹிட்டாகியுள்ளது.
அப்படி சூர்யாவுக்கு பல முறை நிகழ்ந்துள்ளது. ஆம். விக்ரமன் இயக்கத்தில் ஒரு காதல் கதை. விஜய் கதை கேட்டு அவருக்கு பிடித்துப்போக, மீண்டும் பூவே உனக்காக போல ஒரு ஹிட்டை விக்ரமன் கொடுப்பார் நடிக்க சம்மதித்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் - கடவுளையே நாங்க ஏமாத்த போறோம்.! இந்த செய்கை எங்க போய் நிக்கப்போகுதுனு தெரியலையே.!?
அந்த நேரம் தான் விஜய் பத்ரி, தமிழன், பகவதி, திருமலை என ஆக்சன் பக்கம் நகர்ந்துகொண்டிருந்தார். முதல் நாள் ஷூட் முடிந்தது. விஜய்க்கு எனோ சரியாக தோன்றவில்லை. உடனே விக்ரமனிடம் விஜய், நான் இப்போது ஆக்சன் பக்கம் நகர்ந்து வருகிறேன் இப்பொது இந்த கதை வேண்டாம் என கூறிவிட்டாராம்.
அடுத்தது தான் விக்ரமன் ஹீரோவை தேடி கடைசியில் சூர்யா ஓகே செய்து அவரை ஹீரோவாக வைத்து எடுத்து அந்த படத்தை முடித்தார் விக்ரமன். அந்த திரைப்படம் தான் உன்னை நினைத்து. வளர்ந்து வந்த நேரத்தில் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக உன்னை நினைத்து அமைந்தது.