அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியது விஜய் தான்... சீக்ரெட் உடைத்த இயக்குனர்

by Akhilan |
அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியது விஜய் தான்... சீக்ரெட் உடைத்த இயக்குனர்
X

தமிழின் சூப்பர் ஹிட் படமான நீ வருவாய் என படம். இப்படத்தில் பார்த்திபன் மற்றும் தேவயாணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்தது.

கோலிவுட்டின் ஹிட் இயக்குனராக இருந்தவர் இராஜகுமாரன். சில படங்கள் எடுத்தாலும் அத்தனையும் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்றது. இவர் இயக்குனர் விக்ரமனிடம் பணியாற்றி சினிமாவிற்கு வந்தவர். அவரின் முதல் படம் நீ வருவாய் என. இது இரண்டு ஹீரோ சப்ஜட் என்பதால் பார்த்திபன் கதாபாத்திரத்தில் விஜயையும், அஜித்தையும் நடிக்க வைக்கவே முதலில் இவர் விரும்பினாராம்.

அதுகுறித்து, ராஜகுமாரன் விஜயை சந்தித்து இருக்கிறார். அவரிடம் இந்த கதையையும் கூறினாராம். ஆனால், அப்போது கோலிவுட்டில் பெரிய நடிகராக இருந்த விஜய், கால்ஷூட் பிரச்சனையால் இந்த படம் நடிக்க முடியாமல் ஆனது. உடனே அதற்கு மாற்று வழி சொன்ன விஜய், எனக்கு அஜித் கதாபாத்திரம் கொடுங்கள். அஜித்தை ஹீரோவாக்கி விடுங்கள் என்றாராம். ஆனால் அதற்கு அஜித் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து, விஜயிற்கு பதில் பார்த்திபனை நடிக்க வைக்க ராஜகுமாரன் முடிவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: “பார்த்திபன் கிட்ட நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்’.. ஆனா அவரோ?? கண்கலங்கும் சீதா..

அவருக்காக கதையில் கூட சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்தே, விஜயிற்கு பதில் பார்த்திபன் நடித்து அப்படம் திரைக்கு வந்தது எனத் தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜகுமாரன். தொடர்ந்து, 85 நாட்கள் ஓடிக்கொண்டிருந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூக்க தியேட்டர்காரர்கள் நினைத்தனர். ஆனால், ராஜகுமாரன் தான் 100 நாட்கள் மட்டும் ஒரு நாலு தியேட்டர்களில் ஓடவிடலாமே எனக் கேட்டிருக்கிறார். அவரின் கோரிக்கையை ஏற்ற பிறகே படத்தினை 100 நாட்கள் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story