விஜய் எத்தனை ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்...
விஜய் எப்போதுமே இளசுகளின் சூப்பர்ஸ்டாராக தான் வலம் வருகிறார். இவரின் பட அறிவிப்பு துவங்கி ரிலீஸ் வரை ரசிகர்கள் ஏகத்துக்கும் வரவேற்பு கொடுப்பார்கள். விஜய் அதிகமான ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார் எனக் கூறப்பட்டு வருகிறது. அப்படி எத்தனை ரீமேக் படங்களில் தான் தளபதி நடித்திருக்கிறார் என பார்த்துவிடுமே.
அனியாதிப்ரவு என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விஜய் முதலில் நடித்தார். காதலுக்கு மரியாதை என பெயர் வைக்கப்பட்டிருந்த இப்படத்தில் ஷாலினி அஜித் ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் விஜயின் கிராப்பில் மிகப்பெரிய பீக்கை கொடுத்தது. தொடர்ந்து, தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான் பிரியமானவளே மற்றும் நினைத்தேன் வந்தாய். அடுத்த ரீமேக்கான விஜயின் மிகப்பெரிய ஹிட் படமான ப்ரண்ட்ஸ். மலையாளத்தில் அதே பெயரில் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் தான்.
இதை தொடர்ந்து அவர் நடித்த பெருவாரியான ரீமேக் படங்கள் எல்லாம் தெலுங்கு ரீமேக் தான். அதில், யூத், வசீகரா ஆகியவை அடங்கும். ரீமேக்கில் சூப்பர்ஹிட் படங்களான கில்லி, போக்கிரி படங்கள் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்திருந்தார். பல தெலுங்கு மற்றும் மலையாள ரீமேக்கில் நடித்த தளபதி ஒரே ஒரு இந்தி ரீமேக் படத்தில் தான் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் தமிழில் நண்பன் என்ற பெயரில் வெளியான இப்படம் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சினிமா கேரியரில் 14 ரீமேக் படங்கள் நடித்த விஜய் நண்பனுக்கு பிறகு எந்தவித ரீமேக் படங்களிலும் நடிக்கவில்லை.