More
Read more!
Categories: Cinema News latest news

விஜயிடம் தலைவர்171 கதையை சொன்ன லோகேஷ்…! எனக்கு இப்படி கதை பிடிக்காதுடா..!

Thalaivar171: விஜயின் லியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் விஜய் குறித்தும் அவர் எடுக்க போகும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

விஜயின், த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் என வில்லன்கள் கூட்டம் ஒரு பக்கம் என்றால் கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என சப்போர்ட் ரோலில் நடிப்பவர்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க:லோகேஷ் சொன்னா விஜயிக்கு புத்தி இல்லையா..? இதை சொல்ற அளவு அவர் பெரிய ஆளா..?

படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து விட்டது. இந்த வாரத்தின் திங்களில் இருந்து ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். இன்னைக்காவது ஏமாத்தாதீங்க என சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தின் ரிலீஸ் இன்னும் ஒருவாரமே டைம் இருக்கும் நிலையில் ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து படம் வசூலை குவிக்கும் என லோகேஷ் காத்திருக்கிறார். இந்த படத்தினை முடித்த விஜய் 68வது பட வேலைகளில் பிஸியாகி விட்டார்.

இதையும் வாசிங்க:ரஜினியின் வில்லன் மீது இரக்கம் கொண்ட ரசிகர்கள்… அப்போ அந்த காட்சி வேணாம்… தூக்கி போட்ட படக்குழு..!

லோகேஷ் ரஜினியை வைத்து இயக்க இருக்கும் 171வது படத்தின் வேலைகளை விரைவில் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேட்டியில் விஜயிடம் இந்த கதை கூறியதை பற்றி சொல்லி இருந்தார். ரஜினியின் படத்தின் கதையை லோகேஷ் 10 நிமிடம் சுருக்கி விஜயிடம் சொன்னாராம்.

அதை பொறுமையாக கேட்ட விஜய், எனக்கு பொதுவாகவே 10 நிமிடத்தில் சொல்லும் இந்த கதைகள் எல்லாம் பிடிக்காது. ஆனா இந்த கதை பயங்கரமா இருக்கேடா எனக் கூறி புகழ்ந்தாராம். விஜயே அந்த படத்திற்கு லைக்ஸ் தட்டி விட்டதால் அடுத்த எதிர்பார்ப்பில் ரஜினி ரசிகர்களுக்கும் தொத்தி விடும் என்றே கூறப்படுகிறது. 

Published by
Akhilan

Recent Posts