பள்ளி பருவ விஜய்யின் சைலன்ட் சேட்டைகள்... தளபதி விஜய் அம்மா கூறிய சீக்ரெட்ஸ்..

by Manikandan |   ( Updated:2022-06-22 08:31:38  )
பள்ளி பருவ விஜய்யின் சைலன்ட் சேட்டைகள்... தளபதி  விஜய் அம்மா கூறிய சீக்ரெட்ஸ்..
X

தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவரை விட அவரது ரசிகர்கள் தான் இந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

vijay3_cine

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று ஓர் முன்னணி யூடியூப் சேனலில் விஜய்யின் அம்மா ஷோபா ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது பலவிதமான, விஜய் பற்றிய ரகசிய தகவல்களை குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்களேன் - தளபதி67 இயக்குனர் லோகேஷ் இல்லையா.?! உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்த புதிய இயக்குனர்..?

அதில் அவர் கூறுகையில், விஜயின் பள்ளி பருவ சேட்டைகளை குறிப்பிட்டார். விஜய் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பாராம். டீச்சர் உடன் சென்று பேச வேண்டும் என்றாலும், டீச்சரை அழைத்து, ' டீச்சர் உங்கள் காதை கொஞ்சம் கொடுங்கள்.' என்று கேட்டு அவர் காதில் ரகசியம் போல தான் எந்த ஒரு விஷயத்தையும் சொல்வாராம்.

விஜயுடன் நெருங்கி பழகிய நண்பர்களுக்கு மட்டுமே அவர் மிகவும் கலகலப்பாக இருப்பவராக தெரியும். மற்ற வெளியிடங்களில் அவர் மிகவும் சாதுவாக மிகவும் அமைதியாக தான் இருப்பார். என்று விஜய்யின் அம்மா அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Next Story