மீண்டும் வீட்டுக்கு வரும் விஜயா… கோபியை கிழித்த பாக்கியா.. கடுப்பில் இருக்கும் சக்திவேல்!..

by Akhilan |   ( Updated:2024-11-14 10:30:24  )
மீண்டும் வீட்டுக்கு வரும் விஜயா… கோபியை கிழித்த பாக்கியா..  கடுப்பில் இருக்கும் சக்திவேல்!..
X

Vijay serials

Vijay serials: டி ஆர் பியில் விஜய் டிவியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் எபிசோட் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: ரோகிணி மற்றும் வித்யா திடீரென விஜயா கேஸ் வாபஸ் வாங்கிய காரணம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் சிட்டி கால் செய்து சீக்கிரம் 2 லட்சம் பணத்தை ரெடி செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். முத்து மீனாவின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து விஜயாவை நேரில் சந்திக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: சிவா Unfit ஆ… கங்குவா ரிலீஸ் தேதியில் மோசமான திட்டம்… அடி வாங்கிய ஞானவேல்ராஜா…

மீனாவின் அம்மா விஜயாவிடம் மன்னிப்பு கேட்க மன்னிக்கிற தப்பையா உங்க பையன் பண்ணியிருக்கான் என கோபப்படுகிறார். மனோஜ் செஞ்ச தப்ப இவங்க மறந்துட்டாங்க இல்ல என முத்து அவர்களுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு பார்வதியிடம் கோபமா இருந்தா நாளைக்கு டைவர்ஸ் வரைக்கும் போயிடும் என ஏத்திவிட்டு செல்கிறார்.

இதனால் பயந்து போன விஜயா பையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடிவிடுகிறார். வரும் அவரை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து வருகின்றனர். மீனா சாப்பாடு இல்லாமல் விஜயா இளைத்து விட்டதாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இனி மீனாவின் குடும்பம் இங்கு வரக்கூடாது என விஜயா கண்டிஷன் போட்டுக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி: பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் பிரச்சனை என செய்தி வராமல் இருக்க கோபி கவலையாக போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அங்கு செந்தில் வர அவர் இதையெல்லாம் செய்யாதே சைக்கோ போல இருக்கு என அவருக்கு அட்வைஸ் செய்கிறார். அவரிடம் கடுப்படித்து விட்டு வீட்டிற்கு வருகிறார் கோபி.

எழில் வீட்டிற்கு வர செழியன் மற்றும் இனியா பாக்கியா குறித்து திட்டிக் கொண்டிருக்கின்றனர். எழில் எதுவும் சொல்லாமல் ரெஸ்டாரண்டிற்கு கிளம்பி விடுகிறார். அப்பொழுது உள்ளே வரும் பாக்கியா கோபியை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: Karthi: பாகுபலி காலகேயனே தோத்துருவார் போல.. ‘கங்குவா’ படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ

ராதிகா வந்து என்ன விஷயம் என கேட்க கோபி செய்த விஷயங்களை கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இதற்கு என்னிடம் இருக்கும் இவர் அனுப்பிய செப்தான் சாட்சி. இனி நான் சும்மா இருக்க மாட்டேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2: ராஜி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு டியூஷன் எடுக்க கிளம்பி செல்கிறார். கதிருடன் அவர் சைக்கிளில் கிளம்பும் போது சக்திவேல் மோசமாக விமர்சிக்கிறார். இதனால் கடுப்பாகும் ராஜி டியூஷன் எடுத்து சம்பாதித்தாலும் அது என்னுடைய சுய சம்பாத்தியம்.

நான் உங்களை மாதிரி மற்றவர் உங்களை ஏமாற்றி வட்டிக்கு சம்பாதிக்கவில்லை என திட்டி விட்டு செல்கிறார். தற்காலிக அரசு வேலைக்காக செந்தில் தேர்வு எழுத இருக்கும் விஷயத்தை வீட்டில் சொல்கிறார் மீனா. பாண்டியனும் அதற்கு முதலில் விமர்சித்தாலும் பின்னர் ஒப்புக்கொள்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: கொஞ்சமா பண்ணீங்க!. ஓவர் கான்பிடன்ஸ் வச்ச ஆப்பு!. ஞானவேல் ராஜாவை பழிதீர்த்த எஸ்.கே!…

தங்கமயில் எம்ஏ படித்துவிட்டு நீயும் ஏன் சும்மா இருக்க. சீக்கிரம் வேலைக்கு போ என கூறிவிடுகிறார். இதனால் அவர் அதிர்ச்சியாகிறார். வீட்டில் இருப்பவர்கள் செந்தில் தேர்விற்காக அவருக்கு வாழ்த்துக்களை கூறுகின்றனர். சக்திவேல் உள்ளே வந்து கோபமாக முத்துவேலிடம் கத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த சொத்து ராஜிக்கு தானா என அவர் கேட்க கடுப்பாகும் முத்துவேல் சக்திவேலை அடித்து விடுகிறார். பின்னர் அவர் கிளம்பி சென்றுவிட அப்பத்தா தன்னுடைய மருமகளிடம் இந்த சண்டை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

Next Story