ஹீரோ, வில்லன் , கெஸ்ட் கதாபத்திரம் என எந்த ஏரியாவாக இருந்தாலும் தனது முத்திரையை பலமாக பதித்து விடுகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சினிமா உலகில் கொஞ்சம் லேட்டாக வந்தாலும் படங்களில் கிடுகிடுவென நடித்து தற்போது 50வது படத்தை நெருங்கி வருகிறார்.
இவரை சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்தார். அந்த படமும் நல்ல வெற்றி பெற்ற திரைப்படம்.
இதையும் படியுங்களேன் – இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!
இருந்தாலும், தான் நடிக்கும் 50வது படத்தை தனது குருநாதர் சீனு ராமசாமி தான் இயக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம் விஜய் சேதுபதி. அந்த படம் ஓடுகிறதோ இல்லையோ அது தேவையில்லை. 50 வது படம் சீனு ராமசாமி அவர்களுக்கு தான் என்பதில் மாற்றமில்லாமல் இருக்கிறார்.
இதையும் படியுங்களேன் – மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் அல்லது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தனது குருநாதருக்கான மரியாதையை இந்த காலத்திலும் இப்படி கொடுக்கிறாரே , தங்களது குருநாதரான இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு ரஜினி, கமல் கூட இப்படி செய்ததில்லையே என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…