கமலுக்கு போட்ட ஸ்கெட்ச்.! மாட்டிக்கொண்டு முழிக்கும் விஜய் சேதுபதி.!

கமல்ஹாசன் தற்போது தனது அரசியல் பயணத்தில் இருந்து கொஞ்சம் விலகி, அடுத்ததாக தனது ஆஸ்தான சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து, படங்களை தேர்வு செய்து நடிப்பது, தயாரிப்பது என களமிறங்கிவிட்டார்.
தற்போது அவர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து, அவரது ராஜ் கமல் பட நிறுவனத்திற்கு அடுத்தடுத்து வெவ்வேறு ஹீரோக்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் திரைப்படம் தயாரிக்க உள்ளார்.
அதனை அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் இணைந்து படம் செய்ய அவரிடம் கதை விவாதம் செய்தார். அப்போது அந்த படத்தில் கமல் தான் நடிப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது வேறு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அப்படத்தில் விஜய் சேதுபதி, விக்ரம் என இருவரும் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட படங்கள் லிஸ்டில் இருக்கிறது.
இதையும் படியுங்களேன் - இவ்ளோதான் டைம்.! இதுக்குள்ள எனக்கு வேணும்.! அடம்பிடிக்கும் சூர்யா.!
அதனால் கமல் தயாரிப்பு என்றால் அதில் கால்ஷீட் உடனே கொடுக்க வேண்டும். அதனால், விஜய் சேதுபதி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறாரம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.