சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் மாஸ் வில்லனாக விஜய் சேதுபதி!.. இனிமே ஹீரோ அவ்வளவுதானா!..

Published on: July 21, 2023
vijay sethu
---Advertisement---

துவக்கம் முதலே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோ என்பதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் சாதரணமாக பேசி நடிக்கும் நடிகர் இவர். ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என பல வேடங்களிலும் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

vijay sethu

பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வில்லனாக நடிக்க துவங்கிவிட்டார். மாஸ்டர் படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் படத்தில் மாஸ் வில்லனாக வந்து கலக்கினார். அதேபோல், கோலிவுட் இயக்குனர் அட்லி பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி கலக்கியிருக்கிறாராம். அவரின் நடிப்பை பார்த்து ஷாருக்கானே மிரண்டு போனாராம்.

Sardar
Sardar

இந்நிலையில், அடுத்து கார்த்தி நடிக்கவுள்ள சர்தார் 2 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். சர்தார் சூப்பர் ஹிட் ஆனதால் இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.எஸ்.மித்ரான் ஏற்கனவே இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னது ‘7ஜி ரெயின்போ காலனி-2’வில் இவங்கதான் ஹீரோயினா? பேசியே கொண்டுருவாங்களே?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.