நிம்மதி இல்லாம இனி யாரும் புலம்பாதீங்க... விஜய்சேதுபதி சொன்ன பெஸ்ட் ஐடியாவைக் கேளுங்க...

by sankaran v |   ( Updated:2024-11-30 02:20:06  )
vjs
X

vjs

பிக்பாஸ் சீசன் 8க்குள் விஜய் சேதுபதி நுழைந்ததும் பல தத்துவங்களும் அவருக்கு அத்துப்படியாகி விட்டன. அந்த வகையில் பேச வேண்டிய கருத்துகளை ரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறார்.

ஆனால் இதுதான் உண்மை என்று துணிச்சலாகப் போட்டு உடைத்து விடுகிறார். சமீபத்தில் கூட அதுமாதிரியான ஒரு இயல்பான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

Also read: 2025 லவ்வர்ஸ் டே-வுக்கு ரிலீஸாகும் புதிய படங்களின் லிஸ்ட்!.. கவினின் படம் மட்டும் டவுட்!…

சமீபத்தில் விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட சூரி மாதிரி பெரிய ஹீரோ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அற்புதமாக நடித்துள்ளார் என்று பேசி உள்ளார். அந்த வகையில் பார்க்கும்போது விஜய் சேதுபதி தான் முதலில் ஹீரோ ஆனவர்.

பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். ஆனால் தன்னை எளிமையாக்கிக் கொண்டு வளர்ந்து வரும் ஹீரோவான சூரியைப் பாராட்டுகிறார் அல்லவா. இந்த எளிமையும், பெருந்தன்மையும் தான் அவரது வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம்.

vjs

vjs

விஜய் சேதுபதி சினிமாவில் நுழைந்த கதை ரொம்பவே போராட்டமானது தான். அவர் கூட்டத்தில் ஒருவனாக வந்து நின்றவர் தான். தென்மேற்குப் பருவக்காற்றாய் வீச ஆரம்பித்த அவர் சேதுபதியாகி, தர்மதுரையாகி, மாஸ்டர் ஆகி சினிமாவில் பல படிக்கட்டுகளைக் கடந்து விட்டார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் கால் பதித்து விட்டார். அந்த வகையில் விஜய் சேதுபதி இன்று மகாராஜாவாக உயர்ந்து நிற்கிறார் என்றே சொல்லலாம்.

அவரது சமீபத்திய மகாராஜா படம் சீனத்து ரசிகர்களைக் கூட மிரட்டியுள்ளது. அந்த அளவுக்கு அவரது நடிப்பு அபாரமாக உள்ளது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். இப்போது விஜய் சேதுபதி சொன்ன ஒரு சுவாரசியமான விஷயம் இதுதான்.

இதை மட்டும் யாரும் வாழ்க்கையில் கடைபிடிக்காம இருந்துடாதீங்க. அவ்ளோ தான் பைத்தியமாகும் நிலை கூட வரலாம் என மறைமுகமாக எச்சரித்துள்ளார் என்றே சொல்லலாம். என்ன சொல்றாருன்னு பாருங்க.

Also read: அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

ஒருத்தர அழிக்கணும்னா செலவுக்கு காசு கொடுத்து 3 வேளை சோறு மட்டும் போட்டு நீ எதுவுமே பண்ணாதன்னு சொல்லு. அவனே செத்துடுவான். இல்லனா பைத்தியம் புடிச்சிடும். ஏன்னா அவன் மூளைக்கு வேலை இருக்காது. சம்பளம் கூடவோ குறையாவோ என்னவோ, ஆனா வேலை செய்யுறோம்ல. அது தான் நிம்மதி என்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.

Next Story