latest news

விஜய் சேதுபதியின் பத்தா டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா படத்தின் டீசர் வெளியானது.

விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா படத்தின் டீசர் வெளியானது.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பத்தா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெற்றி படத்தை கொடுத்த பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெய்பீம் புகழ் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சாய் அபயங்கரை திரையுலகிற்கு அழைத்து வந்ததே அட்லி என்பது குறிப்பிடத்தக்கது. 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில் பத்தா டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Author
Sai Vikas ✓

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

விஜய் சேதுபதியின் பத்தா டீசர் வெளியீடு | Cinereporters