அஜித் போனா என்ன!.. நான் இருக்கேன்.. விக்னேஷ் சிவனுக்கு உதவிக் கரம் நீட்டிய நடிகர்!..

by Rohini |
ajith
X

ajith vikki

அஜித்தின் ஏகே - 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் விளைவாக திரையுலகை சார்ந்தவர்களும் விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவர்களும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனராம்.அதாவது அஜித்தின் பெரிய வாய்ப்பு போய் விட்டது என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும் அதை விட பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனராம்.

அந்த லிஸ்டில் சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோர் இந்த ஆறுதல்களை கூறிவருகின்றனராம். இவர்களுக்கிடையில் நடிகர் விஜய்சேதுபதி தானாகவே முன்வந்து நான் உனக்கு கால்ஷீட் கொடுக்கிறேன், படம் பண்ணலாம் என்றும் சொல்லியிருக்கிறாராம். ஏற்கெனவே விஜய் சேதுபதியும் விக்னேஷ் சிவனும் இணைந்து இரண்டு படங்களில் பணிபுரிந்திருக்கின்றனர்.

ajith1

ajith1

அந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவனின் மார்கெட்டையும் உயர்த்தியது. மீண்டும் இவர்கள் இணைவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி தானாக முன்வரக் காரணம் என்ன என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

ஏற்கெனவே அரண்மனை 4 படத்தில் அதிக சம்பளம் கேட்டார் என்பதற்காக அந்தப் படத்தில் விஜய்சேதுபதியால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதாவது 12 கோடி வரை கேட்டு முடியாத பட்சத்தில் 10 கோடிக்கு இறங்கியும் சுந்தர் .சி 5 கோடி தான் ஆனால் 40 நாள் கால்ஷீட் என்று கூறியிருக்கிறார். அதனாலேயே அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

ajith2

vijay sethupathi vikki

மேலும் அவரின் மார்கெட்டும் முன்பு மாதிரி இல்லையாம். அவர் நடித்த சங்கத்தமிழன் படத்தின் சாட்டிலைட் உரிமம் 12 கோடி வரை இருந்தது. ஆனால் அந்தப் படம் எந்த அளவு ப்ளாப் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இன்னும் அவர் நடித்து வெளியாகாத ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் உரிமம் வெறும் 3 கோடி வரை தான் போயிருக்குதாம்.

இதையும் படிங்க : ஹீரோக்களை விட அதிகம் சம்பாதிக்கும் இசையமைப்பாளர்கள்!.. இந்த லிஸ்ட்ல இவர எதிர்பார்த்திருக்க மாட்டிங்க!..

இதனால் விஜய்சேதுபதியை பார்த்து பல தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகின்றனராம். மேலும் கைவசம் இருந்த படங்கள் கூட கைவிட்டு போயிருக்கிறது. ஒரே ஒரு படம் தான் கையில் வைத்துள்ளாராம் விஜய்சேதுபதி. இதனாலேயே விக்னேஷ் சிவனிடம் போய் கேட்டிருப்பார் என்று கூறினார்.

Next Story