அவருக்குதான் விஜய் சேதுபதியை பிடிக்காதே!.. பிக்பாஸ் எண்ட்ரி சூடு பிடிக்குமா?!...

by Akhilan |   ( Updated:2024-08-24 11:20:23  )
அவருக்குதான் விஜய் சேதுபதியை பிடிக்காதே!.. பிக்பாஸ் எண்ட்ரி சூடு பிடிக்குமா?!...
X

#image_title

Biggboss Tamil8: பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8ல் சமீபகாலமாக பிரபலங்களின் லிஸ்ட் கசிந்து வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்கள் வித்தியாசம் காட்டினால் அந்த ரியாலிட்டி ஷோக்கு அதிக ஆதரவு தருவார்கள். அந்த லிஸ்டில் முன்னாடி வைப்பது பிக் பாஸ் தமிழ் சீசன் தான். பல பரபரப்புகளையும் தாண்டி உச்சபட்ச எதிர்பார்ப்புகளை உருவாக்கி இதுவரை ஏழு சீசன்கள் ஹிட் அடித்து இருக்கிறது.

இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..

இதற்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் கமல்ஹாசன் இந்த எட்டாவது சீசனை தொகுத்து வழங்க முடியாது என அறிவித்துவிட்டார். இதனால் அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களும் எழுந்தது. இதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் இப்பட்டியலில் இணைந்தனர்.

ஏற்கனவே பிக் பாஸ் ஓடிடியை தொகுத்து வழங்கிய சிலம்பரசனிடம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் இதை தொகுத்து வழங்க முடியாது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க இருக்கிறார்.

karthick

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதால் போட்டியாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அந்த வகையில் ஏற்கனவே குக் வித் கோமாளி பிரபலங்கள், முன்னால் சீசன் வின்னரான காதலர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முக்கிய நடிகருடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்.. ஆனா இதுவரை நடக்காத ரூட்டாம்..

இந்நிலையில் சுச்சி லீக்ஸ் சர்ச்சை பாடிய சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பிக்பாஸ் சீசன் எட்டை தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதியா? 8னு சொல்லியும் அந்த பக்கம் அவர் போகலாமா? இந்த சீசனில் கார்த்திக் குமார் கலந்து கொள்ளப் போகிறாரா? அவருக்கு தான் விஜய் சேதுபதியை பிடிக்காதே எனக் கூறி அது குறித்த வீடியோ ஒன்றையும் அதில் இணைத்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய கணவர் ஒரு கே எனக் கூறி சுசித்ரா அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். மற்ற சீசன்கள் எல்லாம் தொடங்கிய பின்னரே பரபரப்பு பற்றிக் கொள்ளும் நிலையில் இந்த சீசனின் ஆரம்பமே அதிரடியாக தொடங்கி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இப்போதே பிக் பாஸுக்கு எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story