அரசன் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி!.. இதுதான் கெட்டப்பா?!.. செம பிக்!…

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான வட சென்னை படத்தின் கிளைக் கதையாக அரசன் படம்…

arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான வட சென்னை படத்தின் கிளைக் கதையாக அரசன் படம் வெளியாகும் என வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால், சில பிரச்சனைகளால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

அதற்கு முக்கிய காரணமாக சிம்பு இருந்தார். அவர் ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து கொடுக்காமல் வெற்றிமாறன் படத்திற்கு போனார். இது ஐசரி கணேஷுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர் பிரச்சனை செய்தார். தற்போது அது பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அவரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுப்பதாக சிம்பு கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

சமீபத்தில் அரசன் படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்கியது. அப்போதுதான் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. வட சென்னை படம் உருவானபோதே அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில்தான் அரசன் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில், அரசன் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதுதான் அவரின் கெட்டப்பா என்பது விரைவில் தெரிந்துவிடும்.