முதல்ல என்ன விரட்டி விட்டாங்க!. இப்ப கமலோட முத்தம்!.. நெகிழும் விஜய் சேதுபதி!…

Published on: June 15, 2024
vijay sethu
---Advertisement---

ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்தவர் விஜய் சேதுபதி. இப்போதுவரை தனக்கென எந்த இமேஜும் இல்லாமல்தான் நடித்து வருகிறார். ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு டெரர் வில்லனாக வந்த அதே விஜய் சேதுபதிதான் சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தில் சலூன் கடைக்காரராக வித்தியாசம் காட்டி இருக்கிறார். இதுதான் விஜய் சேதுபதியின் வெற்றியும் கூட.

ஹீரோ, வில்லன், கேமியோ என கிடைக்கும் நல்ல வாய்ப்புகளில் நடித்து வருகிறார். வளரும் நேரத்தில் சூது கவ்வும் போன்ற கதை கொண்ட படத்தில் எந்த நடிகரும் நடிக்க மாட்டார். ஆனால், விஜய் சேதுபதி நடிப்பார். கதாபாத்திரம் பிடித்திருக்கிறதா என்று மட்டுமே அவர் பார்க்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் வந்து அதிர வைத்தார்.

இதையும் படிங்க: யாருக்கும் அடங்காத பயில்வான்! சூரி சொன்ன ஒரு வார்த்தையில் அடங்கிட்டாரே.. அப்படி என்ன சொன்னாரு?

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் விஜய் சேதுபதி. ‘அட வித்தியாசமான கதைகளில், இயல்பாக நடிக்கிறாரே’ என ஆச்சர்யம் கொடுத்தார். இவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். இப்படி மட்டுமே நடிப்பேன் என கண்டிஷன் போடாமல் மனதுக்கு பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இடையில் சில மசாலா படங்களில் ஹீரோயிசம் காட்டியும் நடித்தார். அது வொர்க் அவுட் ஆகவில்லை. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக அசத்தலாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதி ஒரு முக்கிய காரணம். விஜய் சேதுபதி சுலபமாக சினிமாவுக்கு வந்துவிடவில்லை.

kamal

பல இயக்குனர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு அசிங்கப்பட்டவர்தான். பல சினிமா நிறுவனங்கள் இவரை நிராகரித்திருக்கிறது. சமீபத்தில் அவர் கலந்துகொண்ட பேட்டியில் கமல் அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப்பார்த்து பேசிய விஜய் சேதுபதி ‘வாழ்க்கை ஒரு கம்மினாட்டி சார். அது யாரை எங்க கொண்டு போய் நிறுத்தும்னே சொல்ல முடியாது. நம்மவர் படத்துல் காலேஜ் பசங்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கேட்டு போனேன். அப்போது சின்ன பையன் போல இருப்பேன்’.

முகத்தில் எந்த பக்குவமும் இருக்காது. உயரம் கம்மி என சில காரணங்களை சொல்லி என்னை ரிஜெக்ட் செய்துவிட்டனர். ஆனால், அதே கமல் சாருடன் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவரின் முத்தமும் கிடைத்தது’ என நெகிழ்ந்து பேசினார் விஜய் சேதுபதி.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.