விடுதலை இரண்டாம் பாகத்தில் தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கும் விஜய் சேதுபதி… சூரிக்கு போட்டியா?

Published on: May 4, 2023
Viduthalai
---Advertisement---

விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அதுவரை ஒரு நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி, “விடுதலை” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார். ஒரு அப்பாவி கான்ஸ்டபிளாக மிகவும் யதார்த்தமாக தனது நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் சூரி.

வெற்றிமாறன் எப்போதும் ஜாதிய அடக்குமுறை, அரசு அதிகாரம் ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் தனது திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் “விடுதலை” முதல் பாகத்தில் காவல்துறையின் அராஜகத்தை நம் கண்முன் கொண்டுவந்திருந்தார். போலீஸின் பிடியில் கிராமத்து பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை துள்ளியமாக படமாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார் வெற்றிமாறன். ஒரு திரைப்படம் என்ற எண்ணமே பார்வையாளர்களுக்கு வரவில்லை, ஒரு நிஜத்தை கண்முன் கொண்டுவந்திருந்ததுபோல் இருந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். அதே போல் விமர்சகர்களும் மிகச் சிறப்பான திரைப்படம் என்று பாராட்டியிருந்தனர்.

இத்திரைப்படத்தில் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில நிமிடங்களே வந்தாலும் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டு சென்றிருந்தார். “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் “விடுதலை” இரண்டாம் பாகம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “விடுதலை” இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதாக இருக்கிறதாம். ஆதலால் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடகப்படவுள்ளதாம். இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி இதற்கு முன் “சிந்துபாத்”, “நானும் ரவுடிதான்” ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷை வச்சி ஒரு கே.ஜி.எஃப் கதை.. வெற்றிமாறன்தான் இயக்குனர்- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.