தயாரிப்பு நிறுவனங்களில் இருக்கும் நடிகர்கள் டைரியில் காசு கூட கொடுக்காமல், நைஸாக தனது புகைப்படத்தை மேலே வைத்து விட்டு வந்துவிடுவேன். யாராவது பார்த்து நடிக்க சான்ஸ் கொடுக்க மாட்டார்களா என ஏங்கி வந்த விஜய்சேதுபதி இப்போ உலகளவில் பிரபலமான Forbes அட்டை படத்திலேயே செம மாஸாக ஜொலிக்கும் புகைப்படத்தை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் மொத்த பாலிவுட் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் விஜய்சேதுபதி. அத்துடன் மட்டும் நிற்காமல் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ஜவான் திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து ஷாருக்கான் உடனே மோதி மாஸ் காட்டிய மக்கள் செல்வன் பாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்து 4 பிரம்மாஸ்திரத்தை வச்சிருக்காரு பிரபாஸ்!.. ஒவ்வொரு படமும் 1000 கோடி.. தலையே சுத்துதே!..
இந்த ஆண்டு இந்தியளவில் பல்வேறு துறைகளில் கலக்கிய நபர்களை சமீபத்தில் போட்டோஷூட் நடத்திய ஃபோர்ப்ஸ் தற்போது விஜய்சேதுபதி, கரீனா கபூர், மனைவி உபாசனாவுடன் இருக்கும் ராம் சரண், கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள் அடங்கிய அட்டைப் படத்தை வெளியிட்டுள்ளது.
அதில், அழகாக கருப்பு கலர் டிசர்ட்டில் விஜய்சேதுபதி செம கூலாக போஸ் கொடுத்து கெத்துக் காட்டுகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதியே கத்ரீனா கைஃப் உடன் விஜய்சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. டோட்டலாகவே பாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகி விடுவாரா விஜய்சேதுபதி என்கிற கேள்வியும் எழுகிறது. அந்தளவுக்கு விடாமுயற்சியும் திறமையும் கொன்டு தொடர்ந்து உழைத்து வருகிறார் விஜய்சேதுபதி.
இதையும் படிங்க: பாலாவை நம்பி பிரயோஜனம் இல்லை!.. அந்த பிரிட்டிஷ் நடிகை படத்தை பொங்கலுக்கு களமிறக்கிய வாரிசு நடிகர்!..
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…