பால குடிச்சிட்டு விஷத்த கக்கலாமா? விஜய் சேதுபதியின் பேச்சால் திரைபிரபலங்கள் அதிர்ச்சி...

தமிழ் சினிமாவில் மிக குறைந்த காலகட்டத்தில் வந்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தகாரராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் கவர்ந்தவர்.
இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையும் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கும். முதலில் துணை நடிகராக வந்து பின் நடிகராக உயர்ந்து வில்லனாகவும் அசத்தினார். அவர் எடுக்கும் கேரக்டர்க்கு முக்கியத்துவம் இருக்கானு பாத்து பாத்து நடிப்பவர். அதனால் தான் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய முடிந்தது.
இவரின் அண்மையில் வெளிவந்த படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் பேரை பெற்றுத்தந்தது. இந்த படத்தை பார்க்க வந்த அவரது மனைவிக்கி தியேட்டரின் பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகமே நடத்தினர் ரசிகர்கள்.
இதையும் படிங்கள்: நம்ம ராதா மகளா இது?..வாய்ப்புக்காக இப்படியா?..கன்னா பின்னா கவர்ச்சியில் கார்த்திகா..
ஆனால் விஜய் சேதுபதியோ திரையில் படங்கள் வெளியாவதை விட ஓடிடியில் வெளியாவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். அதிகமான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சியை தருகிறது என ஓடிடியை வரவேற்று பேசியுள்ளார். மேலும் பான் இந்தியா படம்னா என்ன? ஒரு படம் நல்ல படம்னா அது எல்லா மொழிகளிலும் வெற்றியை தரும் அதுதானே பான் இந்தியா படம் என கூறியுள்ளார். அவர் சிறுவயதிலயே தியேட்டரிலயே வளர்ந்தவர் ஓடிடியை வரவேற்று பேசியது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.