விஜய் சேதுபதிக்கு 80s லுக்!.. பக்கா வில்லேஜ் ஆக்சன்!.. பத்தா டீசர் வீடியோ விமர்சனம்!..
பத்தா திரைப்பட டீசர் விமர்சனம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து உருவாகியிருக்கும் பக்தா திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க தொடங்கிய புதிதில் அவரை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த பாலாஜி தரணிதரன்.
14 வருடங்கள் கழித்து தற்போது பததா படம் உருவாகியிருக்கிறது. இடையில் சீதக்காதி, ஒரு பக்க கதை ஆகிய இரண்டு படங்களையும் பாலாஜி தரணிதரன் இயக்கினார். ஆனால் அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
பக்தா டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போது கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் படம் என்பது தெரிகிறது. படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. மேலும் யாருக்கும் அடங்காத, ஊரில் யாருக்கும் பயப்படாத ஒரு அடாவடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தை இயக்குனர் அட்லி தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். இந்த படத்தில் லிஜோ மோல் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கிறார்..
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். வழக்கமாக இரைச்சலையே இசையை கொடுக்கும் அவர் இந்த படத்திற்கு இனிமையான இசையை கொடுத்திருப்பது போல தெரிகிறது. ஏனெனில் டிரெய்லர் வீடியோவில் இரைச்சல் கேட்கவில்லை. அதே நேரம் விஜய் சேதுபதிக்கு வைத்திருக்கும் விக் செட்டாகவில்லை.
பார்க்கும்போதே அது விக்தான் என்பது தெரிகிறது. நடிகர்களின் கெட்டப்பை பார்க்கும்போது 80களில் நடப்பது போல கதை எழுதப்பட்டிருக்கிறது. பத்தா படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்தா திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது.












