Connect with us

Cinema News

உங்களை தான் நம்பி இருக்கிறேன்.. விஜய் சேதுபதியின் ஒரே நம்பிக்கை அந்த அஜித் பட இயக்குனர் தான்….

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதற்கு உதாரணம், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் ஆகிய படங்களின் வெற்றியை கூறலாம்.

ஆனால், முந்திய காலகட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்கும், இப்போது என்னெவென்றால், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கு தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.

இதனால், விஜய் சேதுபதி தற்போது தனது ரூட்டை மற்ற முடிவு செய்துள்ளாராம். ஆம் வில்லனாக நடிப்பதை சற்று குறைத்து விட்டு. ஒரு நல்ல சூப்பரான கமர்ஷியல் படத்தை மக்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அந்த கமர்ஷியல் படத்தை தீரன், வலிமை, நேர்கொண்ட பார்வை, AK61 படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கவுள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- ஏ.ஆர்.ரகுமான் மீது கடுப்பில் சியான் விக்ரம்.! நீங்க இப்படி செஞ்சிட்டிங்களே சார்.?!

கடந்த சில மாதங்களுக்கு முன்பே எச்.வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், தற்போது இந்த கூட்டணி உறுதியாகிவிட்டதாம். எச்.வினோத் ஏற்கனவே விஜய் சேதுபதியிடம் ஒரு கதை கூறிவிட்டாராம். அந்த கதையும் அவருக்கு பிடித்து விட்டதாம்.

அஜித் படத்தை முடித்த பிறகு, எச் .வினோத் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவார் என தெரிகிறது. ஆனால், அஜித் வைத்து படம் இயக்கும் வினோத், அடுத்ததாக விஜய், சூர்யாவிடம் என செல்லாமல், விஜய் சேதுபதிக்கு படம் பண்ணுவாரா என்கிற கேள்வியும் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top