ஒரே டார்ச்சர்!. இனிமே யார் கேட்டாலும் ‘நோ’ தான்!.. கடுப்பான விஜய் சேதுபதி!..

by சிவா |
vijay sethu
X

Vijay sethupathi: நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் பல இயக்குனர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டு அலைந்தவர்தான் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை உட்பட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சீனுராமசாமி இவரை தான் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவான பீட்ஸா படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. அதோடு, ரசிகர்களை சிரிக்கவைத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படமும் வெற்றி அடைந்தது. 'அட வித்தியாசமன கதைகளில் நடிக்கிறாரே' என ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.

தொடர்ந்து சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களும் வெளிவந்தது. விஜய் சேதுபதி படமெனில் வித்தியாசமாக இருக்கும் என்கிற எண்ணமும் உருவானது. ஒருகட்டத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகராக மாறினார். இவரின் நடிப்பில் மாதம் 2 படங்கள் வெளியானது.

Vijay Sethupathi

Vijay Sethupathi

ஒருபக்கம் ஹீரோவாக நடித்தாலும் நண்பர்கள் கேட்பதால் சில படங்களிலும் கேமியோ வேடத்திலும் நடித்து கொடுத்தார். கேமியோ எனில் சில காட்சிகளில் மட்டும் வருவார். தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக படங்களில் கேமியோ வேடத்தில் நடித்தவர் விஜய் சேதுபதிதான். அப்படி அவர் நடித்த 'ஓ மை கடவுளே' போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி ‘இனிமேல் கேமியோ வேடத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். அப்படி நான் நடிப்பதன் அருமை பலருக்கும் தெரியவில்லை. நம்மை எப்படி நடத்த வேண்டும் என தெரியவில்லை. சிலர் எளிமையாக கேட்கிறார்கள். சிலர் அசால்ட்டாக கேட்கிறார்கள். நாம் முடியாது என சொன்னால் எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார்காள்.

ஏற்கனவே சொந்த வாழ்க்கைக்கும், படங்களுக்கும் நேரம் ஒதுக்கமுடியவில்லை. முடியாது என சொன்னால் ‘கதையை கேட்டுவிட்டு சொல்லுங்கள்’ என உரிமையாக சண்டை போடுகிறார்கள். மற்ற நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. அதனால் என்னிடம் வருகிறார்கள். முடியாது என சொன்னால் கோவித்து கொள்கிறார்கள். நடிக்கவே முடியாது என சொல்லும் நடிகர்களிடம் இவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’ என விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

Next Story