வெற்றிமாறனும் விஜயும் இணையனும்னா இதுதான் ஒரே வழி!.. இது நடந்தா ஆச்சர்யம்தான்!..

by சிவா |
vetrimaran
X

Vijay vetrimaran: ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவியாளர்தான் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஆச்சர்யம் கொடுத்தார். இந்த படம் தனுஷுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். வெற்றிமாறன் எந்த மாதிரியான இயக்குனர் என்பதை இப்படம் காட்டியது. இப்படத்திற்கும், தனுஷுக்கும் விருதுகளும் கிடைத்தது. பெரும்பாலும் நல்ல நாவல்களை கையில் எடுத்து அதற்கு திரைக்கதை அமைப்பது வெற்றிமாறனின் வழக்கம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..

அடுத்தடுத்து, விசாரணை, வட சென்னை, அசுரன் என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கினார். அசுரன் படம் தனுஷுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்திற்கு பின் சூரி - விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட்.

இப்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா - விஜய் ஆகியோர் நடிக்க ஆசைப்பட்டனர். சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. அதேபோல், விஜயிடமும் வெற்றிமாறன் ஒரு கதை சொல்லியிருந்தார். ஆனால், அது இன்னமும் டேக் ஆப் ஆகவில்லை.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

வெற்றிமாறனிடம் ஒரு பழக்கம் உண்டு. மிகவும் பொறுமையாகத்தான் படத்தை எடுப்பார். படம் எடுக்கும்போதே கதையில் சில மாற்றங்களை செய்வார். எவ்வளவு நாட்களானாலும் அவரை நம்பி ஒரு நடிகர் தன்னை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு சிறந்த படமாக வெளிவரும். ஒரு படத்தை எடுக்க 2 வருடம் கூட எடுத்துக்கொள்வார்.

ஆனால், ஒரு வருடத்திற்கு 2 படங்களில் நடிக்கும் விஜய் வெற்றிமாறனுடன் பயணிப்பது என்பது கஷ்டம்தான். அதேநேரம், 2 வருடங்களுக்கு வேறெந்த படம் பற்றியும் யோசிக்காமல் விஜய் வெற்றிமாறனிடம் தன்னை அர்ப்பணித்தால் கண்டிப்பாக அவரின் திரைவாழ்வில் அது ஒரு சிறந்த படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய் அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..

இதையும் படிங்க: விஜய்க்கு பேசவே தெரியல!.. எப்படியாவது பேச வைங்க ப்ளீஸ்… பிரபலத்திடம் புலம்பிய எஸ்.ஏ.சி..

Next Story